Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

சென்னையில் லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

-

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்(30) இவர்  லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அவரை பீர் பாட்டிலால் தாக்கி செல்போன் மற்றும் வெள்ளி செயின் பறித்துச் சென்ற 2 பேர் கைது  செய்து லாரி ஓட்டுனரிடம் பறித்துச் சென்ற செல்போன் மற்றும் வெள்ளிச் செயின் போலீசாா் பறிமுதல் செய்தனா்.சென்னையில் லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

லாரி ஓட்டுனரான கணேஷ் லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கடந்த 24 ஆம் தேதி  சென்னை. கோபாலபுரம் பகுதியில் உள்ள குடோன் அருகே லாரியை நிறுத்திவிட்டு, சத்யம் திரையரங்கம் அருகேயுள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றபோது. 2 மர்ம நபர்கள் கணேஷிடம் பேச்சு கொடுத்து அருகிலுள்ள திரு.வி.க. சாலையிலுள்ள பொதுக்கழிப்பிடம் அருகே அழைத்துச் சென்று கணேஷின் தலையில் கட்டை மற்றும் பீர் பாட்டிலால் தாக்கி கணேஷின் செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த வெள்ளிச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதில் இரத்தக்காயமடைந்த கணேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நடந்த சம்பவம் குறித்து  அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்தனர். அண்ணா சாலை காவல் நிலைய   தனிப்படை பொலிசார்  சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை கைபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.சென்னையில் லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

லாரி  ஓட்டுனரை கட்டை மற்றும் பீர் பாட்டிலால் தாக்கி செயின் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபர்களை சிசிடிவி கட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில்  ஒருவர்  அண்ணா சாலை சத்தியம் திரையரங்கு அருகில் வசிக்கும் விஜய்பிரபு(27) மற்றொருவர் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த டேவிட் (எ) வினோத்(32)  என்பது தெரிய வந்ததை அடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து. அவர்களிடமிருந்து கணேஷிடம் பறித்துச் சென்ற  செல்போன் மற்றும் வெள்ளி செயின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் விஜய்பிரபு மீது 2 குற்ற வழக்குகளும்,  டேவிட் (எ) வினோத் மீது 3 திருட்டு வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும்  விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவையில் அடுத்தடுத்து வழிப்பறி, செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது – கத்தி, வாள் பறிமுதல்

MUST READ