இன்ஸ்டாகிராமில் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மகன் மற்றும் தந்தை கைது.
மும்பையில் வசித்து வரும் 23 வயது பெண் ஒருவர் கல்லூரி விடுமுறை நாட்களில் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானவர் சுஜித் (27). அப்பெண்ணின் ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானவர் சுஜித் என்பவர் அப்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து வைத்து கொண்டு அப்பெண்ணை மிரட்டி, பணம் கேட்கவே, அப்பெண்ணும் சுஜித்திற்கு பணம் அனுப்பி வந்ததாகவும், பின்னர் மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பணம் ரூ.50,000/- அனுப்ப வேண்டும் என்று சுஜித் மற்றும் அவரது தந்தை வின்சென்ட் கூறியபோது, தன்னிடம் பணம் இல்லையென்று கூறியதால், சுஜித் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளதாக கூறி புகார் அளித்துள்ளார். இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்க்கொண்டனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் புகார்தாரர் கூறியது உண்மையென தெரியவந்ததின்பேரில், வழக்கில் சம்பந்தப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுஜித்,(27) குற்ற செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை 2.வின்சென்ட்(55) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.