Homeசெய்திகள்க்ரைம்ஆவடி அருகே இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்

ஆவடி அருகே இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்

-

ஆவடி அருகே இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்

சென்னையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜூலை 1 ம் தேதி மாநில கல்லூரி (பிரசிடென்சி கல்லூரி) மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர்.மறுபுறம், சென்னையில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரயில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்தனர்.

இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற மின்சார ரயில், ஆவடி – அண்ணனூர் இடையே சிக்னலுக்காக நின்றிருந்தது. இதை கண்ட, மாநில கல்லூரி மாணவர்கள் சிலர், சங்கிலியை இழுத்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தியுள்ளனர்.

ஆவடி அருகே இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்பின், கீழே இறங்கி தண்டவாளத்தில் கிடந்த ஜல்லியை எடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது வீசியுள்ளனர்.இதனால், அதிர்ச்சி அடைந்த மின்சார ரயில் பயணியர், ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்து கொண்டனர்.

கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, அன்று மதியம் 3:00 மணி அளவில், சிக்னல் கிடைத்து மின்சார ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

விடியா திமுக அரசானது மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்

தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், ரயில் பயணியருக்கு இடையூறு ஏற்படுத்திய மாணவர்களை தேடி வந்தனர்.தாக்குதலின் போது எடுத்த வீடியோ அடிப்படையில், மோதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காண தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அதன் அடிப்படையில், கடந்த 6 ம் தேதி, திருத்தணியைச் சேர்ந்த சாம்சன் (19) என்ற கல்லூரி மாணவரை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த மோதலில் ஈடுபட்ட அரக்கோணத்தைச் சேர்ந்த ஐயப்பன்(20) , ஜெகன்(18) , திருத்தணியைச் சேர்ந்த சரத்(19), வல்லரசு(19) மற்றும் அரக்கோணத்தைச் சேர்ந்த 17 வயது ஐ. டி. ஐ.,மாணவர் உட்பட 5 பேரை ஆவடி ரயில்வே போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

MUST READ