Homeசெய்திகள்க்ரைம் "வேட்டையன்" திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ஐ டி பட்டதாரிகள் இருவர்  கைது

 “வேட்டையன்” திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ஐ டி பட்டதாரிகள் இருவர்  கைது

-

 "வேட்டையன்" திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ஐ டி பட்டதாரிகள் இருவர்  கைது

நடிகர் ரஜினிகாந்தின் “வேட்டையன்” மற்றும் மலையாளத்தில் வெளியான ஏ.ஆர்.எம் திரைப்படத்தை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதனை  இணையதளத்தில் வெளியிட்ட சத்தியமங்கலத்தை சேர்ந்த ஐடி பட்டதாரிகளை கொச்சின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்மையில் மலையாளத்தில் வெளியான நடிகர் ரோகினோ தாமஸ் நடித்த “ஏ.ஆர்.எம்” திரைப்படத்தை ரயில் பயணி ஒருவர் தனது செல்போனில் பார்த்துக் கொண்டிருந்ததாக, அப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கேரள மாநிலம் கொச்சின் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 "வேட்டையன்" திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட ஐ டி பட்டதாரிகள் இருவர்  கைதுபுகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் இணையத்தில் வெளியான அந்த திரைப்படத்தின் வீடியோ லிங்க் எந்த இணையத்தில் வெளியானது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஏ.ஆர்.எம் திரைப்படம் பெங்களூரில் இருந்து அப்லோடு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதை அடுத்து பெங்களூரு விரைந்த கொச்சின் சைபர் கிரைம் போலீசார் அங்கு பதுங்கி இருந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த குமரேசன் (29), பிரவீன் குமார் (31) ஆகிய இருவரை மடக்கிப் பிடித்துள்ளனர். விசாரணையில் ஐ.டி பட்டதாரிகளான இருவரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துடன் தொடர்புடைய ஒன் தமிழ் எம்வி ( One tamil mv ) என்ற இணையதளம் மற்றும் telegram செயலியில் அப்லோட் செய்ததாக தெரியவந்துள்ளது.

தலா படத்திற்கு ஒரு லட்சம் என்ற அடிப்படையில் படத்திற்கு ஏற்ப கூடுதல் வருமானத்தையும் இவர்கள் ஈட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மிராஜ் திரையரங்கில் ஏ.ஆர்.எம் படத்தை செல்போனில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தையும் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

சாலையில் நடந்து சென்ற பெண் காவலர் மீது மதுபோதையில் மோதிய ஆசாமி

கைது செய்யப்பட்ட குமரேசன் மற்றும் பிரவீன்குமார் செல்போன்களை ஆய்வு செய்தபோது அண்மையில் வெளியான புதிய திரைப்படங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கொச்சின் அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் மேலும் இவர்களது கூட்டாளியான மற்றொரு நபரையும் கொச்சின் போலீசார் தேடி வருகின்றனர் தெரிவித்துள்ளனர்.

MUST READ