சென்னையில் அமலாக்க மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ஆறு கோடி மதிப்பிலான இரண்டு கிலோ கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். கொக்கைன் போதை பொருள் வைத்திருந்த 8 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை மவுண்ட் பகுதியில் கொக்கைன் போதை பொருளை சிலர் வைத்திருப்பதாக அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 5 நபர்கள் அழைத்து விசாரணை செய்தபோது அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கொக்கைன் போதை பொருட்கள் வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர் கொக்கைன் வைத்திருந்த ஐந்து நபர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் ஒரு கிலோ கொக்கைன் 5 செல்போன்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் சென்னை கோயம்பேடு பகுதியில் தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த மேலும் 3 நபர்கள் கைது செய்தனர், அவரகளிடம் இருந்து மேலும் ஒரு கிலோ கொக்கைன் கைப்பற்றப்பட்டது. ஒரு கார் மற்றும் 3 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.
போதை பொருள் கொக்கைன் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சாயல்குடி ரேஞ்சில் வனக்காப்பாளராகப் பணிபுரியும் மகேந்திரன் அவரது உறவினர் பாண்டியிடமிருந்து அவர் கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்குகளை சேகரிக்கும் போது கண்டுபிடித்ததாக தெரிவித்த சுமார் 1 கிலோ எடையுள்ள கோகைனை பெற்றதாக தெரிவித்தார். மேலும் பழனீஸ்வரன் என்பவருக்கும் கடற்கரையோரத்தில் 1 கிலோ கோகைன் கிடைத்ததாக தெரிவித்தார்.
காசிம் என்பவர் மூலம் சென்னையில் ஒரு பெருந்தொகைக்கு கோகைனை விற்க இருந்தது விசாரணையில் தெரியவந்தது. முகமது முபாரக், எட்வர்ட் சாம், முகமது இட்ரிஸ் மற்றும் காஜா மொஹைதீன் ஆகியோரும் இச்சதியில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போதைபொருள் கடத்தல் சதிச்செயலில் வேறு யாரேனும் இணைந்துள்ளனரா என்பதையும் மற்றும் போதைபொருளின் மூலம் அறியவும் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
முயல் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது… துப்பாக்கி மற்றும் முயல் இறைச்சி பறிமுதல்!