அம்பத்தூர் அடுத்த ஒரகடம் வெங்கடேஸ்வரா நகர் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு.இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.இதே பகுதியில் டில்லி என்பவரும் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் இருவரும் நேற்று இரவு ராயன் திரைப்படத்திற்கு சென்று விட்டு வீட்டின் வெளிப்புறம் தங்களது R15 உயரக வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று உள்ளனர்.அப்போது இரவு சரியாக 2 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் அடுத்தடுத்து இரண்டு இரு சக்கர வாகனத்தையும் திருடி சென்றுள்ளனர்.
இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அம்பத்தூர் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.