பணம் ஏடுத்து தறுவதாக கூறி வட மாநில் இளைஞர்கள் இருவர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து 60,000 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளனா். அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் தண்டையார்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணன் (53) நேற்று மாலை பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு வந்துள்ளார்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜிவாலி குமார், சோட்டிலால் பஸ்வான் இருவரும் கிருஷ்ணன் என்பவரிடம் ஏடிஎம் ஐ கார்டை வாங்கி பணம் எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ஏமாற்றி உள்ளனர்.
கிருஷ்ணன் கொடுத்த ஏடிஎம் கார்டில் இருந்து 60,000 ஆயிரம் ரூபாய் பணத்தை வட மாநில இளைஞர்கள் இருவர் எடுத்துச் சென்றுள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் ஜீவாலி குமார், சோட்டிலால் பஸ்வான் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்கிங் கூட போக விட மாட்டீங்களா…பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்ள பெண்கள் அச்சம்!