வாஷிங்டன் விமான விபத்து குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். வானம் தெளிவாக இருந்தது. பிறகு ஹெலிகாப்டர் எப்படி விமானத்தை தாக்கியது? இது நல்லதல்ல என்றார். ஹெலிகாப்டர் எப்படி, ஏன் விமானத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது? ஏன் மேலே, கீழே அல்லது மறுபுறம் திரும்பவில்லை? இந்த விபத்து தடுக்கப்பட்டிருக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே கனடியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் இருந்து வாஷிங்டன் நோக்கி விமானம் வந்து கொண்டிருந்தது. விபத்துக்குப் பிறகு, விமானம் போடோமாக் ஆற்றில் விழுந்தது. விமானத்தில் 60 பேர் இருந்தனர். ஆற்றில் இருந்து இதுவரை 18 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து நடந்தபோது, டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார். வெள்ளை மாளிகைக்கும் விமான நிலையத்துக்கும் இடையிலான விமான தூரம் மூன்று கிலோமீட்டருக்கும் குறைவாகவே உள்ளது. விமானத்தின் ஓரத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் திடீரென வந்ததது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பயணிகள் விமானம் மீது மோதிய ஹெலிகாப்டர் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் பிளாக்ஹாக் (எச்-60) ஆகும்.
ரொனால்ட் ரீகன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தை அடுத்து, ரீகன் தேசிய விமான நிலையத்தில் அவசரநிலை விதிக்கப்பட்டது. பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்திற்கு அருகில் வான்வெளியில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.