Homeசெய்திகள்க்ரைம்நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடிய கல்லூரி மாணவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடிய கல்லூரி மாணவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

-

கோபிசெட்டியாளையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டை வெளியே பூட்டி விட்டு நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடி வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை விடிய விடிய காத்திருந்தது சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

கோபி அருகே உள்ள கடுக்காம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கமேடு கிராமத்தில் நேற்று இரவு ஸ்கூட்டரில் வந்த இரண்டு வாலிபர்கள், அதே பகுதியை சேர்ந்த ஒரு வீட்டின் கதவை முன்புறம் பூட்டிவிட்டு, அங்கு இருந்த பெண்ணின் துணியை எடுத்து அவர் வளர்த்து வந்த நாட்டு கோழிகளை திருடி உள்ளனர். கோழியின் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது கதவு பூட்டப்பட்டு இருப்பதை அறிந்த பெண், செல்போன் மூலமாக அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடிய கல்லூரி மாணவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்.

நான்கு ஆண்டுகளாக கோழி, வெள்ளாடு திருடப்பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பெண்ணின் வீட்டிற்கு வந்த போது, கோழிகளை திருடிக்கொண்டு இருந்த இரண்டு பேர் ஸ்கூட்டரை விட்டு விட்டு கரும்பு காட்டிற்குள் புகுந்து தப்பினர்

அதைத்தொடர்ந்து விடிய விடிய கிராம மக்கள் கரும்புக்காட்டை சுற்றி காவலுக்கு இருந்த போது, காட்டை விட்டு வெளியே வந்த இரண்டு வாலிபர்களையும் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். ரப்பர் பைப் மற்றும் தடியால் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 3 மணி நேரமாக அடித்து உதைத்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற சிறுவலூர் போலீசார், உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் பொதுமக்களிடம் இருந்து மீட்கப்பட்ட கோபி இந்திரா நகரை சேர்ந்த கிருபாகரன், நவீன்குமாரை ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

கிருபாகரன் மீது ஏற்கனவே 6க்கும் மேற்பட்ட திருட்டு,கஞ்சா வழக்குகள் உள்ள நிலையில்,கடந்த மாதம் இதே போன்று மளிகை கடையில் திருடியதாக பங்களாபுதூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

வழக்கில் இருந்து ஜாமீனில் வந்த கிருபாகரன், அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நவீன்குமார் எனபவரை அழைத்துக்கொண்டு கோழி திருடிய போது பொதுமக்களிடம் இருவரும் பிடிபட்டனர்.

MUST READ