Homeசெய்திகள்க்ரைம்வியாசர்பாடி எம்.கே.பி நகரில் வீடியோ கேமரா திருடி சி.சி.டிவி சிக்கிய  வாலிபர்

வியாசர்பாடி எம்.கே.பி நகரில் வீடியோ கேமரா திருடி சி.சி.டிவி சிக்கிய  வாலிபர்

-

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வீடியோ பதிவு செய்ய வந்திருந்த புகைப்படக் கலைஞரின் விலை உயர்ந்த வீடியோ கேமரா திருட்டு.

வியாசர்பாடி எம்.கே.பி நகரில் வீடியோ கேமரா திருடி - சி.சி.டிவி சிக்கிய  வாலிபர்சிசிடிவி காட்சிகள் வெளியீடு

வியாசர்பாடி எம்.கே.பி நகரில் வீடியோ கேமரா திருடி - சி.சி.டிவி சிக்கிய  வாலிபர்

ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான வீடியோ கேமரா திருடிய நபரை சி.சி.டிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் இவர் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு அந்த நிகழ்வுகளை படம் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் வழக்கம்போல திருமண நிகழ்ச்சிக்காக அந்த நிகழ்வுகளை படம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்

படப்பிடிக்கும் பணிகள் முடிவடைந்ததும் தனது விலையுயர்ந்த வீடியோ கேமராவை ஒரு பையில் போட்டு அதனை அந்த திருமண மண்டப அலுவலகம் அருகில் வைத்துவிட்டு சாப்பிட சென்றுள்ளார்

அப்பொழுது கேமரா வைக்கப்பட்டிருந்த அந்த பையை மர்ம நபர் ஒருவர் லாவகமாக அதனை தூக்கிச் செல்லும் காட்சிகள் அந்த அலுவலகம் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது .

இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது கேமரா பையினை எடுக்க வந்தபோது அந்தப் பையானது காணாமல் போனது குறித்து லோகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது கேமரா வைத்திருந்த பை திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சடைந்த லோகேஷ் இது குறித்து சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை எடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அதில் லுங்கி கட்டிய நபர் ஒருவர் அந்த கேமரா பையினை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனை தொடர்ந்து அந்த காட்சிகளின் அடிப்படையில் தற்போது சென்னை மகாகவி பாரதியார்  நகர் ( எம்கேபி நகர் )குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.

திருட்டு போன கேமராவின் மதிப்பு 5 லட்சம் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ