Homeசெய்திகள்க்ரைம்கருவில் என்ன குழந்தை…சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பல்:மடக்கி பிடித்த மருத்துவ குழு

கருவில் என்ன குழந்தை…சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பல்:மடக்கி பிடித்த மருத்துவ குழு

-

- Advertisement -

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் செய்யும் கும்பலை மருத்துவ குழுவினர் 55 கிலோமீட்டர் பின் தொடர்ந்து இரண்டு பெண்கள் உட்பட ஒரு வாலிபரை பிடித்து வேப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. அவர்களிடமிருந்து ஸ்கேனர் மற்றும் கார் பறிமுதல் செய்த வேப்பூர் போலீசார் இரண்டு பெண்கள் உட்பட ஒரு வாலிபரை கைது செய்து மேலும் மூன்று பேரை வேப்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.கருவில் என்ன குழந்தை…சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பல்:மடக்கி பிடித்த மருத்துவ குழு

கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியும் ஸ்கேனர் வைத்துக்கொண்டு சட்டவிரோதமாக காரில் ஒரு கும்பல் சுற்றி வருவதாக சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்  இயக்குனருக்கு புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவம் மற்றும் ஊரக நல பணித்துறை இயக்குனர் ராஜமூர்த்தி உத்திரன் பேரில் சென்னை மருத்துவ குழு, டிஎஸ்பி சீதாராமன், எஸ்.ஐ. இளங்கோவன், மற்றும் சேலம் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் நந்தினி மற்றும் மருத்துவ குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்பொழுது சின்னசேலம் பகுதியில் ஒரு காரில் வயிற்றில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா என கண்டறியும் ஸ்கேனர் வைத்துக்கொண்டு ஸ்கேன் செய்வதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற குழுவினர் சின்னசேலம் கூட்டு ரோட்டில் சென்று பார்த்த பொழுது ஒரு காரில்  கர்ப்பிணிப்பெண்ணை ஏற்றிக் கொண்டு அந்த கார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு விரைந்து சென்றது. பின்னர் அந்த காரை 55 கிலோமீட்டர் வரை மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் பின் தொடர்ந்து வந்த மருத்துவ குழுவினர் அந்த கார் வேப்பூர் அருகே ஆவட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சென்று ஒரு பெண்ணுக்கு ஸ்கேன் செய்தது தெரிய வந்தது.

பின்னர் அந்த கார் வேப்பூர் கூட்டு ரோட்டில் மற்றொரு பெண்ணிற்க்கு ஸ்கேன் செய்வதற்காக காத்திருந்தபோது அங்கு மறைந்திருந்த மருத்துவ குழுவினர் அந்த காரை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த காரில்  இரண்டு பெண்கள் மற்றும் ஒரு வாலிபர்  உள்ளே உள்ளே இருந்தது தெரியவந்தது  அந்த காரில் ஸ்கேன் மெஷின் இருந்தது தெரிய வந்தது பின்னர் மருத்துவ குழுவினர் அவர்களை அருகில் இருந்த வேப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், மா. புடையூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு மகன் தென்னரசு வயது 32, திட்டக்குடி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த தீனதயாளன் மனைவி ஹாஜிராபிவி வயது 32, மற்றும் சேலம் மாவட்டம் குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயவேல் மனைவி நல்லம்மாள் வயது 32 புரோக்கர் ஆகிய மூன்று பேர் சேர்ந்து கொண்டு கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிந்து சொல்வது தெரியவந்தது.

பின்னர் வேப்பூர் அரசு தலைமை மருத்துவர் அகிலன் வேப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் அந்த மூன்று நபர்களிடம் விசாரணை செய்ததில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தென்னரசுக்கு ஸ்கேன் மெஷின் வாங்கி கொடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் கடலூர் மாவட்ட எல்லை முடிவு பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிந்து கூறுவதும் மற்றும் கருவை கலைக்க வேண்டும் என்றால் அதற்கு முருகேசன் மாத்திரை வழங்குவதாகவும்.

பின்னர் வேப்பூர் போலீசார்  தென்னரசு, ஹாஜிராபிவி , நல்லம்மாள், முருகேசன், மாலதி, ரமேஷ்,  ஆகிய ஆறு பேர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தென்னரசு வயது 32, ஹாஜிராபிவி வயது 32, நல்லம்மாள் வயது 32 ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான முருகேசன் உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். காரில் ஸ்கேனர் வைத்துக் கொண்டு கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று சட்ட விரோதமாக செய்யும் கும்பலை விரட்டி வந்து பிடித்த சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுண்டர் – காவல் ஆணையர் அருண் விளக்கம்

MUST READ