Homeசெய்திகள்க்ரைம்மனைவி தனியார் பேங்க் மேனேஜர்… கணவன் IPS அதிகாரி… லோன் வாங்கி தருவதாக ரூ.29...

மனைவி தனியார் பேங்க் மேனேஜர்… கணவன் IPS அதிகாரி… லோன் வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி!

-

- Advertisement -

தண்டையார்பேட்டை ஆர்டிஓ ஏஜென்டிடம் வங்கியில் ரூ.5 கோடி லோன் வாங்கி தருவதாக 29 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட மூன்று பேர் கைது!

மனைவி ஆக்சிஸ் பேங்க் மேனேஜர், கணவன் IPS  அதிகாரி என ஏமாற்றி ஆசை வார்த்தை கூறி 29 லட்சம் மோசடி!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஈஸ்வர் / 50 என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தண்டையார்பேட்டை RTO அலுவக, ஏஜெண்டாக வேலை செய்து வந்துள்ளார்.  அதே இடத்தில் புரோக்கராக பணியாற்றிய காட்டாங்குளத்தூர், பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் அலோசியஸ் என்பவர் பழக்கம் ஆகி உள்ளார்.

மனைவி தனியார் பேங்க் மேனேஜர்… கணவன் IPS அதிகாரி… லோன் வாங்கி தருவதாக ரூ.29 லட்சம் மோசடி!அவரிடம் புதிய தொழில் தொடங்குவது மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, அலோசியஸ்  புழல் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த  மாலதி (எ) கல்பனா,  என்பவர் தோழியாக இருப்பதாகவும், அவர் அண்ணா நகர் ஆக்சிஸ் வங்கியில் மேனேஜராக இருந்து வருவதாகவும் அவரது கணவர் சுந்தரமூர்த்தி ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் மூலம் 5 கோடிக்கு லோன் ஏற்பாடு செய்து தருவதாகவும் அதற்கு 30 லட்சம் ரூபாய் கமிஷன் தொகை கொடுத்தால் அனைத்து வேலைகளையும் நாங்கள் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

அலோசியஸ் பேங்க் மேனேஜர் என கூறிய கல்பனா   ஈஸ்வரிடம் நம்பிக்கை வருமாறு பேசி பல தவணைகளாக அலோசியஸ் மற்றும் அவரது நண்பர் ரெட்டில்ஸ் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவருடைய வங்கி  கணக்கிற்கு 29 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை 2022 ம் ஆண்டு அனுப்பியுள்ளார்.

ஆனால் லோன் வாங்கி தருவது பற்றி எந்த  ஏற்பாடும் செய்யவில்லை எனவும், கொடுத்த பணத்தையும் திருப்பி வராமல் இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றி வந்ததால் ஈஸ்வர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கிய அலோசியஸ், /38, செங்குன்றம் பாடியநல்லூர் MAXIMAL FINANCE , நிறுவனத்தில் வேலை செய்யும்  புழல் பகுதியைச் சேர்ந்த மாலதி (எ) கல்பனா, பெ.35, ஓலா கார் ஓட்டுநர் செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் / 36 ஆகிய மூவரை கைது செய்து திட்டமிட்டு ஏமாற்றுதல் நம்பிக்கை மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டையார்பேட்டை போலீசார்  சிறையில் அடைத்தனர்.

MUST READ