Homeசெய்திகள்க்ரைம்கணவரை காலி செய்த மனைவி - வாக்குமூலம் கொடுத்த படுபாதகி

கணவரை காலி செய்த மனைவி – வாக்குமூலம் கொடுத்த படுபாதகி

-

கணவரை காலி செய்ததாக மனைவி வாக்குமூலம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை காலி செய்த மனைவி - வாக்குமூலம் கொடுத்த படுபாதகி

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கவுஸ் பாஷா(46) என்பவரை மனைவி சஜிதா பானு கொலை செய்ததாக கைது.

தன்னுடைய தவறான நடவடிக்கைகளை கணவர் கண்டித்ததால் கொலை செய்ததாக சஜிதா பானு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கவுஸ் பாஷா(46).
இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி சஜிதா பானு என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கவுஸ் பாஷா தனது வேலை நேர பணிக்காக வெளியே செல்லும் நேரத்தில் சஜிதா பானு தனது செல்போன் மூலம் பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது.

கணவரை காலி செய்த மனைவி - வாக்குமூலம் கொடுத்த படுபாதகி

கவுஸ் பாஷா போன் செய்தால் எப்போதும் சஜிதா பானுவின் செல்போன் பிஸியாக இருந்ததாக கூறப்படுகிறது. கவுஸ் பாஷா தனது மனைவி சஜிதா பானுவிடம் பலமுறை இது குறித்து கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சஜிதா பானு தனது கணவரை விட்டு பிரிந்து சில நாட்கள் தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது.

சஜிதா பானு மேலும் தனது தொடர்பை விரிவுபடுத்தி ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசி வந்ததாகவும், ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சஜிதா பானுவின் பெற்றோர் சமாதானம் பேசி சஜிதா பானுவை அவரது கணவர் கவுஸ் பாஷாவுடன் சேர்த்து வைத்ததாக கூறப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அலையில் சிக்கி முதியவர் பலி

இருப்பினும் தனது கணவனின் வீட்டிற்கு வந்த சஜிதா பானு தனது ஆண் நண்பர்களின் தொடர்பை விடவில்லை எனவும் தொடர்ந்து அவர்களிடம் செல்போனில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மீண்டும் கணவன் மனைவியிடையே தகராறு முற்றியதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சஜிதா பானு தனது கணவருக்கு இரவு உணவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து அவரை தூங்க வைத்ததாக தெரிகிறது.

கவுஸ்பாட்சா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் கணவர் ஹவுஸ் பாஷா தூக்கத்திலேயே உயிர் இறந்ததாகவும் தெரிய வருகிறது.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை இறுக்கி கொலை செய்தது உறுதியானது. இதுகுறித்த வில்லிவாக்கம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு

அதன் அடிப்படையில் வில்லிவாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போது ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்கு கணவர் இடையூறாக இருந்ததாகவும், தனது தவறான நடவடிக்கைகளை தட்டிக் கேட்டதால் அவரை கொலை செய்ததாகவும் சஜிதா பானு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த வில்லிவாக்கம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பாலியல் தொழில் செய்தது தொடர்பாக சஜிதா பானு மீது ஏற்கனவே வழக்கு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

MUST READ