Homeசெய்திகள்க்ரைம்காவல்துறை உதவி ஆய்வாளர் என கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

காவல்துறை உதவி ஆய்வாளர் என கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

-

தூத்துக்குடியில் கங்கா தேவி என்ற இளம் பெண் காவல்துறையில் உதவி ஆய்வாளராக சென்னையில் பணிபுரிகிறேன் என ஏமாற்றி  தன்னுடன் படித்த சக தோழிகளின் வீட்டில் தாலி, மற்றும் செல்போன் பணம் திருட்டில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு மோசடி பெண் கங்காதேவியை தாளமுத்து நகர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கங்காதேவி, 12-ம் வகுப்பு வரை படித்துள்ளர்.

இந்நிலையில் கங்கா தேவி தனது வீட்டில் இருந்து வெளியே சென்றதாக கூறப்படும் நிலையில்  கங்காதேவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடி மேற்கு காமராஜர் நகர் பகுதியில் உள்ள தன்னுடன் பள்ளியில் படித்த சக தோழி ஒருவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தோழியின் தாய் கிருஷ்ணவேணியிடம் தான் சென்னையில் தற்போது காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும் தூத்துக்குடியில் ஒரு என்கவுண்டர் விஷயத்திற்காக இங்கு வந்துள்ளேன் ஆகவே இரண்டு நாட்கள் இங்கு தங்கி விட்டு செல்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அதை நம்பி கிருஷ்ணவேணியும் தனது மகளுடன் படித்த பெண் போலீசாக வேர வேலை செய்வதாக சொல்லியதை நம்பி வீட்டில் தங்க வைத்துள்ளார். மேலும்  கிருஷ்ணவேணியின் வீட்டு அருகே இருந்த அக்கம் பக்கத்தினர் கங்கா தேவி மீது சந்தேகத்துடன்  சின்ன வயதில் எப்படி காவல்துறையில் சேர்ந்தீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு தனக்கு காவல் துறையில் சென்னையில் பெரிய நபர் ஒருவர் தெரியும் அவர் மூலம் சேர்ந்தேன். என்னிடம் அடையாள அட்டை உள்ளது என கூறி அவர்களையும் நம்ப வைத்துள்ளார்.

இந்நிலையில் கிருஷ்ணவேணியின் வீட்டில் அவர் மணி பர்சில் வைத்திருந்த தாலி மற்றும் ரூ.2000 பணத்தை எடுத்து விட்டு கங்காதேவி ஏமாற்றி அங்கிருந்து சென்றுள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணவேணி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை கங்காதேவி தன்னுடன் படித்த மற்றொரு சக தோழியான தூத்துக்குடி தாய்நகர் சுனாமி காலனி பகுதியில் வசித்து வரும் வளர்மதி என்பவர்  வீட்டிற்கு சென்றுள்ளார் அங்கேயும் தான் செங்கல்பட்டில் காவல்துறையில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறேன் ஒரு குற்றவாளியை பிடிக்கும் போது தனது தலையில் காயம் ஏற்பட்டு விட்டதாக கூறி தான் இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டில் தங்கிக் கொள்கிறேன் என்று கூறி அங்கே தங்கி உள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை வளர்மதியின் வீட்டிலிருந்து பீரோவில் இருந்த ரூ.5000 பணத்தில் ரூ.2000  பணத்தை எடுத்துக் கொண்டதுடன் வளர்மதியின் செல்போனையும் திருடிக் கொண்டு  இடத்தை காலி செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வளர்மதியும் தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

பட தயாரிப்பில் நஷ்டம்… சர்க்கஸில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்…

இந்நிலையில் இன்று பிற்பகல் தூத்துக்குடி மேட்டுப்பட்டி பள்ளிவாசல் அருகே இருசக்கர வாகனத்தில் கங்காதேவி செல்லும்போது வளர்மதியும் அவரது கணவரும் மோசடி செய்த கங்காதேவியை பிடித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதை அடுத்து தாளமுத்து நகர் காவல் துறையினர் கங்காதேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வேறு யாரிடமும் இதுபோன்று திருட்டு சம்பவங்களில்  ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் போலீஸ் உடையில் சக தோழிகளின் வீட்டில் பெண் ஒருவர் காவல்துறை உதவி ஆய்வாளர் என ஏமாற்றி திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கங்காதேவி போலீசில் இருப்பது போன்று வழக்கமாகவே காக்கி பேண்டில் தான் உலா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ