இன்ஸ்டாகிராம் மூலம் 7 ஆண்களை திருமணம் செய்து நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண்
சமூக வலைத்தளமான ஸ்கெட்ச் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி இளைஞர்களை வளைத்துப்போடும் கூடலூரை சேர்ந்த இளம்பெண் ரசிதா, ஓமலூரை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஒமலூர் வாலிபரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் பல்வேறு பகுதிகளில் நான்குக்கும் மேற்பட்ட வாலிபர்களை இதேபோல் திருமணம் செய்து லட்சக்கணக்கில் ஏமாற்றியது அம்பலம்.
இளம்பெண் ரசிதாவின் செல்போன் எண்களை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவாலா பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவருடைய மகள் ரசிதா என்ற இளம்பெண், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் போலிக் கணக்குகள் துவங்கி இளைஞர்கள் சிலரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து பணம், நகையை பறித்துக் கொண்டு தலைமறைவாகும் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இளம்பெண் ரசிதா இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கைப் பயன்படுத்தி சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மூர்த்தி 30 வயது என்ற இளைஞருடன் நட்பாக பழகி பின்னர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்த 1.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து சவரன் நகையை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார். மனைவியை காணாமல் தவித்த மூர்த்தி, ரசிதா குறித்து விசாரிக்க தொடங்கினார். அப்போது தான் தெரிந்தது, ரசிதா சமூக வலைதளம் மூலம் இளைஞர்களிடம் பழகி அவர்களை வளைத்துப் போட்டு திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஓரிரு மாதங்களில் அவரிடம் இருந்து பணம் மற்றும் நகை, வாகனம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி ஏமாற்று பேர்வழி ரசிதா குறித்து தொளசம்பட்டி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மூர்த்தி புகார் கொடுத்துள்ளார். அதில் ரசிதா என்ற கூடலூரை சேர்ந்த இளம் பெண் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பின்னர் வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளை அடித்து செல்வதாக தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகிய ரசிதாவுக்கும், தனக்கும் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடந்ததாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜூன் 4 ந் தேதி,ஒன்றரை லட்ச ரூபாய் பணம் மற்றும் ஐந்து பவுன் தங்க நகை உடன் தலைமுறைக்கிவிட்டதாகவும், ஆண்களை ஏமாற்றும் ரசிதாவை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் கொடுத்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரசிதா பயன்படுத்திய செல்போன் எண்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் கார், பைக் போன்ற சொகுசு வாகனங்களுடன் பதிவு செய்யும் இளசுகளை குறி வைத்து, ரசிதா இது போன்ற மோசடி சம்பவங்களை அரங்கேற்றம் செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது. போலிக் கணக்குகள் மூலம் பல ஆண்களைத் தனது வலையில் சிக்க வைத்து, அவர்களுடன் நட்பாகப் பேசுவது போல் தொடங்கி பின்னர் ஆபாசமாக சாட்டிங் செய்து கிளுகிளுப்பான புகைப்படங்களை அனுப்பி தன் வலையில் சிக்க வைத்துள்ளார். பின்னர் தன் வலையில் சிக்கும் இளைஞர்களை திருமணம் செய்து கொண்டு பணம் மற்றும் நகைகளை ஏமாற்றியிள்ளார். எனவே அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிறுவன உரிமையாளர் மூர்த்தி தொளசம்பட்டி போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளார்.