Homeசெய்திகள்க்ரைம்வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், மாமியார் கைது 

வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், மாமியார் கைது 

-

வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் அருகே திருமணம் ஆன 10 மாதத்தில் வரதட்சணை கொடுமை செய்து கழுத்து நெரித்து புதுபெண்ணை கொலை செய்த கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

தலையில் டோபா முடியுடன் டிப் டாப்பாக காட்சி கொடுத்து பெண் வீட்டாரை ஏமாற்றி வரதட்சணை பெற்றனர் என்பதும் அதனை வெளியே சொல்ல கூடாது என பெண்னை அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், மாமியார் கைது 

தாம்பரம் அடுத்த சோமங்கலம் அமரபேடூ பஜன கோவில் தெருவை சேர்ந்தவர் கோகுலகண்ணன்(33) பி.டெக். படித்து தனியார் கம்பெனியில் பணி செய்து வருகிறார்.

கடந்த 10 மாதத்திற்கு முன்பாக படப்பை அடுத்த ஒரத்தூரை சேர்ந்த வஜ்ஜிரவேலு என்பவரின் மகள் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த லோகபிரியா(23) என்பவரை 35 சவரன் வரதட்சணையாக பேசி அதில் 30 சவரன் நகை, 5 கி.லோ வெள்ளி பொருட்கள், யூனிகான் இருசக்கர வாகனம் மற்றும் கட்டில்,மெத்தை, பிரோ, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பணம் ஆகியவற்றை வரதட்தனையாக கொடுத்துள்ளனர்.

வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், மாமியார் கைது 

மேலும் 5 சவரன் பாக்கியை பின்னர் தருவதாக வஜ்ஜிரவேலு தெரிவித்த நிலையில் அதற்காக திருமணம் ஆன தினத்தில் இருந்து தொடர்ந்து மாப்பிள்ளை தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மேலும், பாக்கியுள்ள 5 சவரன் நகைகாக 10 சவரன் போடவேண்டும் என கோகுலகண்ணனும் அவரின் தாயார் ராஜேஷ்வரி(61) ஆகியோர் மணமகள் லோகபிரியாவிடம் வாய் சண்டையாக துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பெற்றோர், சகோதர்களிடம் பேச தடை ஏற்படுத்த செல்போன் கொடுக்காமலும், விட்டில் தனியரையில் பூட்டியும் தொடர்ந்து மன உலைச்சலையும் ஏற்படுத்தி வரதட்சணை கொடுமைபடுத்தியுள்ளனர்.

மேலும், பெண்ணை கழுனி வேலையில் ஈடுபடுத்தி தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஞயிற்றுக்கிழமை லோகபிரியாவின் சகோதரர் நேரில் பார்த்து ஏன் செல்போன் எடுக்கல என கேட்டபோது செல்போன் ரீசார்ஜ் செய்யவில்லை என நடந்ததை லோக பிரியாவும் மறைத்துள்ளார்.

வரதட்சணை கேட்டு பெண் கொலை- கணவர், மாமியார் கைது 

அடுத்த நாள் திங்கட்கிழமை காலை லோகப்பிரியா வயல்வெளி வேலைக்கு செல்ல குளித்துவிட்டு கிளம்பும்போது, ஏன் குளித்தாய் வேலை நிறைய இருக்கு என பிரச்சனையை கோகுலகண்ணன் ஆரம்பிக்க அதில் வாய் தகறாறு ஏற்பட்டு கோகுல்கண்ணன் லோகப்பிரியாவின் கண்ணத்தில் அரைந்துள்ளார்.

அவரின் தாயார் ராஜேஸ்வரி லோகப்பிரியாவின் வாயை மூடியுள்ளார். இதில் நினைவிழந்து மயங்கி விழுந்த லோகபிரியா அந்த இடத்திலேயே உயிரிழந்ததுள்ளார்.

இந்த சம்பவத்தை மறைக்க அவரே துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் ஏற்பாடு செய்து அருகிள் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  மேலும் அங்கு உயிரிழந்ததாக தகவல் அளித்ததால் லோகபிரியாவின் உறவினர்களுக்கு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் அளித்து நாடகமாடியுள்ளனர்.

இதனையடுத்து லோகபிரியாவின் தந்தை வஜ்ஜிரவேலு மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிரேத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடற்கூறு ஆய்வு செய்தபோது கழுத்து நெரித்து மூச்சு தினறல் காரணமாக உயிரிழந்தது தெரிய வந்தது.

இதனால் கோகுலகண்ணன், அவரின் தாயார் ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்த சோமங்கலம் போலீசார் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணத்திற்கு முன் கோகுலகண்ணன் தன் ஐ.டி பணியில் இருப்பதாகவும் டோப்பா அணிந்து பார்பதற்கு நல்ல தோற்றம் கொண்ட நபராக போட்டோவை காட்டியும், நேரில் வரும்போதும் டிப் டாப்பாக இருந்த நபர் திருமணம் ஆனவுடன் அவரிடம் நடவடிக்கைகள் மாறியுள்ளது தெரிவந்தது.

நகைக்காக கொடுமை செய்ததும் அதனை பெற்றோர்களுக்கு தெரிய கூடாது என வீட்டில் அறையில் பூட்டியதும், கொலை செய்து அதனை மறைக்க முயன்று போலீசார் விசாரனையில் உண்மை வெளியான இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ