கயத்தாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு .
கயத்தாறு அருகே திருமங்கலகுறிச்சி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மனைவி பேச்சியம்மாள் (70). இவா் மற்றும் இவரது மகன் வடக்கு தெருவை சோ்ந்த மாரிமுத்து (55) ஆகிய இருவரும் ஜூலை – 17 அதே ஊரில் சுடலை கோவில் அருகே பேச்சியம்மாளுக்கு சொந்தமான தோட்டத்திற்கு பருத்தி எடுக்க சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணைக்கு செல்லும் மின் வயா் அறுந்து கீழே கிடந்தது ,அதை பாா்க்காமல் மிதித்த மாரிமுத்து மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.
இதை பாா்த்த அவரது தாய் அவரை மீட்டபோது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்துவை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு வெள்ளாளங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஆனால் அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.