Homeசெய்திகள்க்ரைம்காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை! உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை! உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

-

- Advertisement -

நடுக்காவேரி காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை  செய்துகொண்ட வழக்கில், நடுக்காவேரி  காவல் ஆய்வாளரை  காத்திருப்போர்  பட்டியலுக்கு மாற்றம் செய்ததை ஏற்க முடியாது என்றும், ஆய்வாளர் சர்மிளாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், சகோதரர் தினேஷ் மீது போடப்பட்ட  வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை மற்றும்  நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இரண்டாவது நாளாக இன்றும்,  நடுக்காவேரி  காவல் நிலையம் முன்பு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் கீர்த்திகாவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தொிவித்துள்ளனா்.காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை! உடலை வாங்க மறுத்த உறவினர்கள்தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுக்காவேரி பகுதியை சேர்ந்த அய்யாவு மகன் 32 வயது தினேஷ். இவர் மீது 13 வழக்குகள் உள்ளன. கடந்த 8-ம் தேதி பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி, நடுக்காவேரி போலீசார், தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். தினேஷ் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, அவரை விடுவிக்குமாறு தினேஷின் தங்கைகளான  மேனகா (31),  கீர்த்திகா (29) ஆகிய இருவரும் , காவல்  நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது, போலீசார் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதால், காவல் நிலையம் முன்பு விஷம் குடித்தனர்.

இதையடுத்து அவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா நேற்று காலை உயிரிழந்தார். மேனகா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுக்காவேரி போலீஸ் ஆய்வாளர் சர்மிளா, எஸ்.ஐ., அறிவழகன், போலீஸ் மணிமேகலை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கீர்த்திகாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். இதனால், நேற்று கீர்த்திகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்தது.

மேலும், இன்று காலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், டி.எஸ்.பி.,க்கள் அருண்மொழி அரசு, சோமசுந்தரம், கணேஷ்குமார், ஏ.டி.எஸ்.பி., வீரபாண்டியன் ஆகியோர் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதை போல, நடுக்காவேரி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் ஏ.டி.எஸ்.பி., குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இறந்த கீர்த்திகாவின் அண்ணன் தினேஷ் பரோலில் அழைத்து வரப்பட்டு, மருத்துவக்கல்லுாரி காவல் நிலையத்திற்கு  அழைத்து வரப்பட்டிருந்தார்.

இதற்கிடையில், இளம் பெண் விவகாரத்தை முறையாக கையாளாமல் விட்டதால், இன்ஸ்பெக்டர் சர்மிளாவை இன்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற தஞ்சை எஸ்.பி  ராஜாராமன்  உத்தரவிட்டார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ., இலக்கியா விசாரணை நடத்த உள்ளார். எஸ்.பி., ராஜாராம் விசாரணை கமிஷன் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆய்வாளர் சர்மிளாவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தினேஷ் மீது போடப்பட்ட வழக்குகளை  ரத்து செய்ய வேண்டும். கீர்த்திகா அரசு பணிக்கு தயாரான சூழலில், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். முதல்வர் நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்து இரண்டாம் நாளாக இன்றும் கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொகுசு வாழ்கைக்கு ஆசை… திருட்டில் ஈடுபட்ட தம்பதிகளை மடக்கி பிடித்த போலீஸ்

MUST READ