ஊத்துக்கோட்டையில் மது போதையில் டிஎஸ்பி-யை மிரட்டிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சி பகுதியில் நள்ளிரவில் மது அருந்திவிட்டு சில இளைஞர்கள் ரகளை செய்து வந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஊத்துக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் வாகனத்தை நிறுத்தி தனது ஓட்டுனரை அனுப்பி அவர்களை அழைத்து வர கூறியுள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த அவர்கள் ”நாங்கள் வர முடியாது இது எங்கே ஏரியா அவரை வர சொல்லுங்கள்” என கூறியுள்ளனர்.
பின்னர் கணேஷ்குமார் காரில் இறங்கி அங்கே சென்றபோது அவரை எரிச்சல் படுத்தி தரை குறைவாக பேசி உள்ளனர்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை உதவி ஆய்வாளர் பாஸ்கரையும் இளைஞர்கள் மது போதையில் தரைக்குறைவாக பேசி நடந்து கொண்டுள்ளனர்.
பின்னர் நால்வரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார்.
அவர்களில் ஹரிகிருஷ்ணன், (25)அஜித் (26)விக்னேஷ்குமார், (26 )சசிகுமார் (25) இவர்கள் நான்கு பேரும் தாராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
நண்பர் ஹரி கிருஷ்ணன் என்பவருக்கு பிறந்தநாள் விழா என்பதால் கேக் வெட்டி கொண்டாடி மது அருந்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து நான்கு பேரையும் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.