Homeசெய்திகள்க்ரைம்யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமினில் விடுதலை

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமினில் விடுதலை

-

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமினில் விடுதலையூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமினில் இன்று விடுதலை

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைதான யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஜாமீன் வழங்கி, அவரது யூடியூப் சேனலை மூட உத்தரவிட்டது.

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் கைதான சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபர்களைப் பிடிப்பதில் போலீசார் தீவிரம்

இந்த வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டு, இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையை நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன்பாக கடந்த ஜூலை 31 ஆம் தேதி நடந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேகநாதன், “சர்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என்று ஏற்கெனவே மற்றொரு வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார் ஃபெலிக்ஸ் ஜெரால்டு. மீண்டும் அவர் இதுபோல பேசி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார். அப்போது ஃபெலிக்ஸ் ஜெரால்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “தனது பேச்சுக்கான விளைவை மனுதாரர் தற்போது உணர்ந்துவிட்டார் எனவும் இனி ஒருபோதும் அவ்வாறு பேச மாட்டார்” என்றும் உறுதியளித்துள்ளார்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, ஃபெலிக்ஸ் ஜெரால்டு-ன் யூடியூப் சேனலை மூட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய வகையில் இனி இதுபோன்ற நேர்காணல்களை நடத்தமாட்டேன் என்றும் விசாரணை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு. கடந்த மே மாதம் டெல்லியில் திருச்சி போலீசார் அவரை கைது செய்தனர். பின் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கோவையிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து இரு வழக்குகளிலும் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டு ஜாமீன் பெற்ற அவர் இன்று விடுதலையாகியுள்ளார்.

MUST READ