Homeசெய்திகள்தவெக-வுக்காக நடந்த பித்தலாட்டம்..? நடிகையின் ‘பக்கத்தை’ லவட்டினாரா விஜய்..?

தவெக-வுக்காக நடந்த பித்தலாட்டம்..? நடிகையின் ‘பக்கத்தை’ லவட்டினாரா விஜய்..?

-

- Advertisement -

நடிகர் விஜய் மாநாடு நடத்தியது, பேசியது எல்லாம் இப்போது வரை பரபரப்பான விவாதங்களை கிளப்பி வருகிறது. சீமானின் வசைப்பாடு, திருமாவளனின் கூட்டணி என பல்வேறு விவாதங்களை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், தவெக கட்சிக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள முகநூல் பக்கமும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அந்த முகநூல் பக்கம் நடிகை மேகா ஆகாஷுக்காக உருவாக்கப்பட்டு அதனை விஜ்யின் தவெக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

விஜய்க்கு அரசியலில் செயல்படும் திறன் இருக்கிறது...... பார்வதி நாயர் பேச்சு!

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிந்துள்ள ஒருவர், ‘‘2017ல் நடிகை மேகா ஆகாஷுக்காக உருவாக்கப்பட்ட 45 லட்சம் பேர் பின்பற்றும் ஒரு முகநூல் பக்கத்தை, இந்த அக்டோபர் மாதத்தில் “தமிழக வெற்றிக் கழகம்” என மாற்றி மக்கள் தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்.https://x.com/Saffron_Anil/status/1854909870681870385

இதில் ஒரு கொடுமை என்னவென்றால், இந்த பக்கத்தை பின்தொடரும் நபர்களில் பாதி பேர் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதை போல நடிகர்களுக்காக தொடங்கப்பட்ட facebook, Instagram, Twitter அதிக Followers உள்ள பக்கங்களை குறி வைத்து, அந்த பக்கத்துக்கு சொந்தமானவர்களை தொடர்பு கொண்டு காசு கொடுத்து வாங்கி, “தமிழக வெற்றி கழகம்” என மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

MUST READ