Homeசெய்திகள்பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் - மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அறிவிப்பு..

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அறிவிப்பு..

-

- Advertisement -
school teacher tamilnadu
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டி பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (நவ-14) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், மேலும் 15 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

school

இதனையொட்டி, கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சை ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி தாலுகா பள்ளிகளுக்கும் , திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் தாலுகா பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை விடப்படுவதாகவும், மாவட்டத்தின் மற்ற இடங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் 6 முதல் 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு!
File Photo

இதேபோல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி , கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழை காரணமாக புதுச்சேரி , காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ