9 வயது ‘இன்ஸ்டா குயின்’ தந்தை படிக்கச் சொல்லி கண்டித்தால் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- கற்பகம் இவர்களுக்கு ஒரு மகன், நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயதான பிரதிக்ஷா என்ற மகளும் உள்ளனர். பிரதிக்ஷா திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
பிரதிக்ஷா இன்ஸ்டாவில் தனக்கென ஒரு ஐடியை கிரியேட் செய்து அதில் 50க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து பதிவேற்றியுள்ளார். இந்த ரீல்ஸ்கள் மூலம் அப்பகுதியில் இன்ஸ்டா புகழ் சிறுமியாகவே பிரதிக்ஷா பலரால் அறியப்பட்டு வந்தார்.
இந்தநிலையில், நேற்று (மார்ச் 29) இரவு சுமார் 8 மணி அளவில் சிறுமி பிரதிக்ஷா தனது பாட்டி வீட்டின் எதிரில் விளையாடிக் கொண்டிருந்தார் என கூறப்படுகிறது. விளையாடிக் கொண்டிருந்ததை கண்ட பிரதிக்ஷாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் கற்பகம் ஆகியோர் சிறுமியை விளையாடியது போதும் வீட்டிற்கு சென்று படிக்கும்படி கண்டித்துவிட்டு வெளியே சென்றுள்ளனர்.
வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்ததால் பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. பயந்து போன தந்தை கிருஷ்ணமூர்த்தி ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது, சிறுமி தூக்கிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று சிறுமியை மீட்டு உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு, மருத்துவர்கள் ஒரு மணி நேர சிறுமிக்கு சிகிச்சை அளித்தும் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் சிறுமியின் உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இன்ஸ்டாவில் பல பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து திருவள்ளூர் பகுதியில் பெரும் புகழை பெற்று இன்ஸ்டா குயின் சிறுமி பிரதிக்ஷா உயிரிழந்த சம்பவம் சிறுமியின் குடும்பத்தினர் உறவினர் மட்டுமல்லாமல் திருவள்ளுவர் நகரத்தையே பெரும் சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது.