Homeசெய்திகள்மாவட்டம்நீருக்காக கிணற்றில் விழுந்த யானை பத்திரமாக மீட்பு

நீருக்காக கிணற்றில் விழுந்த யானை பத்திரமாக மீட்பு

-

நீர் அருந்த கிணற்றில் விழுந்த யானை பத்திரமாக மீட்பு

கிணற்றில் விழுந்த 4 மாத குட்டி யானையை வனத்துறையினர் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பென்னாகரத்தில் நடந்துள்ளது.

நீருக்காக கிணற்றில் விழுந்த யானை பத்திரமாக மீட்பு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் அடுத்த கட்டமடுவு கிராமத்தில் 30 அடி ஆழமுள்ள ஒரு விவசாய கிணற்றில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் வனத்துறையினர் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் இந்த குட்டி யானையை கிணற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 4 மாத வயதுடைய குட்டி யானையை கயிறு கட்டி காயம் ஏதுமின்றி பத்திரமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட குட்டி யானையை சரக்கு வாகனத்தில் அழைத்து சென்ற பொதுமக்கள் ஒகேனக்கல் அடுத்த சின்னாறு வனப்பகுதியில் விட்டனர்.

MUST READ