Homeசெய்திகள்மாவட்டம்மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பேரணி

மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பேரணி

-

- Advertisement -

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாணவிகள் பங்கேற்பு!

புதுச்சேரியில் காலப்பட்டு பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு கடற்கரை சாலையில் பேரணியாக சென்றனர்.

விழிப்புணர்வு பேரணியை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கார்கில் நினைவுச் சின்னம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி தூப்லெக்ஸ் சிலை அருகே நிறைவடைந்தது.

MUST READ