Homeசெய்திகள்மாவட்டம்2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி..

2 தலை, 4 கண்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி..

-

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 2 தலை, 4 கண்களுடன் கன்றுக்குட்டி பிறந்துள்ளது.

மனிதர்கள் முதல் கால்நடைகள் , உயிரினங்கள் வரை பிறப்பு என்பதே இயற்கையின் அதிசயம் தான். ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான உறுப்புகளை எப்படித்தான் கடவுள் படைத்தாரோ என்கிற கேள்வி எல்லோருக்குள்ளும் எழுவதுண்டு. பொதுவாக மனிதர்கள் என்றால் ஒரு தலை, 2 கண், காது, கை, கால்கள் , ஒரு மூக்கு என படைக்கப்பட்டிருக்கும். அதுவே கால்நடைகள் என்றால் 2 கண்கள், காதுகள், ஒரு மூக்கு, வாய், 4 கால்கள் என்பதுதான் இயற்கை. ஒரு சில நேரங்களில் மரமணு மாற்றம் அல்லது குறைபாடு காரணமாக சில அதிசய பிறப்புகள் நிகழ்கின்றன.

கன்றுக்குட்டி

அந்தவகையில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ரவீந்தர் என்பவருக்குச் சொந்தமான மாடு இன்று அதிகாலை அதிசய கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அந்தக் கன்றுக்குட்டிக்கு ஒரே உடல்தான் என்றாலும் 2 தலைகள் உள்ளன. இதனால் 4 கண்கள், 2 வாய் மற்றும் 2 மூக்குடன் பிறந்துள்ளது. இந்தக் கன்றுக்குட்டியினையும், பசுவையும் அதன் உரிமையாளர் தொடர்ந்து கண்கானித்து வருகிறார். இந்த அதிசயக் கன்றுக்குட்டியை அப்பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

MUST READ