Homeசெய்திகள்மாவட்டம்விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு - மு.க. ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு – மு.க. ஸ்டாலின்

-

மூன்று மாவட்ட கள ஆய்விற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர் .

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு குறித்தும் தமிழ்நாடு முழுவதும் நேரடியாக சென்று தொடர்ந்து கள ஆய்வுகளை மேற் கொண்டு வருகின்றார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு கள ஆய்வு - மு.க. ஸ்டாலின்

அதன் தொடர்ச்சியாக, இன்றும், நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் சட்ட ஒழுங்கு குறித்தும் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் அக்கள ஆய்வுப்பணிக்காக இன்று காலை சென்னையில் புறப்பட்ட தமிழ்நாடு மு.க .ஸ்டாலின் சாலை வழியாக கார் மூலம் விழுப்புரம் வந்தடைந்தார்.
மேலும், விழுப்புரம் மாவட்ட தொடக்க எல்லையான ஒலக்கூர் பகுதிக்கு வந்த முதலமைச்சர், அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு கள ஆய்வு - மு.க. ஸ்டாலின்

மேலும் அதன் தொடர்ச்சியாக திண்டிவனத்தில் அமைச்சர் மஸ்தான் தலைமையிலும், விக்கிரவாண்டி அண்ணா சிலை அருகே அமைச்சர் பொன்முடி தலைமையிலும், அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ பெரியசாமி உள்ளிட்ட திரளான திமுகவினர், பம்பை உடுக்கை, மேளத்தாளங்கள் முழங்க அவருக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

அதனைத் தொடர்ந்து முண்டியம்பாக்கம், சிந்தாமணி, விழுப்புரம் அண்ணாமலை ஓட்டல், விழுப்புரம் பெரிய காலணி, நான்கு முனை சந்திப்பு ஆகிய இடங்களிலும் திமுகவினர் ஆங்காங்கே தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு உற்சாகமான வரவேற்பளித்தனர்.

திமுகவினர் மற்றும் பொதுமக்கள் வழங்கிய உற்சாக வரவேற்பினை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர். அங்கிருந்து விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில் உயர் அரசு அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு கள ஆய்வு - மு.க. ஸ்டாலின்

அதனைத்தொடர்ந்து இன்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மூன்று மாவட்ட விவசாய பிரதிநிதிகள், தொழில் முனைவோர் , மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டவர்களை சந்தித்து உரை நிகழ்த்தவுள்ளார்.

தொடர்ந்து, விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளோடு சட்ட ஒழுங்கு குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

MUST READ