Homeசெய்திகள்மாவட்டம்திருநின்றவூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - மக்கள் அவதி

திருநின்றவூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் – மக்கள் அவதி

-

திருநின்றவூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - மக்கள் அவதி

ஆவடி அடுத்த திருநின்றவூரில் நேற்று பெய்த மழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் அவதி.

திருநின்றவூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - மக்கள் அவதி

திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள் இதுவரை தங்களை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார்.

திருநின்றவூரில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - மக்கள் அவதி

ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர்,முத்தமிழ்நகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 5000-திற்கும் அதிகமான நபர்கள் வசித்து வருகின்றனர்.இந்த குடியிருப்புகளின் அருகாமையில் திருநின்றவூர் ஈசா ஏரி அமைந்துள்ளது.நேற்றிரவு திருநின்றவூர் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக குடியிருப்புகளில் மழை நீரானது தேங்கியது.இதனால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையே ரயில் சேவை மாற்றம்

மேலும் முழங்கால் அளவு நீரானது தெருக்களில் தேங்கி இருப்பதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.தேங்கி உள்ள மழை நீரில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலாவுவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.இது குறித்து திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் மழை நீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.மேலும் தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக நீரை அகற்றிட மாவட்ட ஆட்சியருக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ