- Advertisement -
பெருங்குளத்தில் தற்போது பல வெளிநாட்டுப் பறவைகள் கூடிவிட்டன. ஆண்டு தோறும் 96 வகை பறவைகள் இக்குளத்தை தேடி வருவதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளம், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை வரவேற்கிறது. 857 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த நீர்நிலையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் காணப்படும் காரணத்தால், பல்வேறு பறவை இனங்கள் இங்கு வலம் வருகின்றன.
சுமார் 96 வகையான பறவைகள் இக்குளத்தை தேடி வருவதாகக் கூறப்படுகிறது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர். கடந்த காலங்களில் மிகவும் அரிதாகக் காணப்படும் எகிப்து கழுகுகளும் இங்கு பதிவாகியுள்ளன. இந்த நீர்நிலையின் உயிரினப் பல்முகத்தன்மை பறவையியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.