Homeசெய்திகள்மாவட்டம்கேஸ் விலை உயர்வு: மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

கேஸ் விலை உயர்வு: மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

கேஸ் விலை உயர்வு: மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் பரமக்குடியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அம்மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி தலைமையில் எல்.பி.ஜி.கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில இணை செயலாளர் பெமிலா ஜெயக்குமார் முன்னிலை வகித்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினரும் மாவட்ட பொருளாளருமான ராஜாராம் பாண்டியன் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்களும் மகிளா காங்கிரசாரும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

MUST READ