Homeசெய்திகள்மாவட்டம்மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் சாதி சான்று கேட்டு - நூதன முறையில் போராட்டம்

மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் சாதி சான்று கேட்டு – நூதன முறையில் போராட்டம்

-

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மலைக்குறவ இன மக்கள் குழந்தைகளுடன் கூடை முடைந்து போராட்டம். சாதி சான்று கேட்டு பல மாதங்களாக வழங்கப்படாததால் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் போராட்டம்.மலைக்குறவ இன மக்கள் சாதி சான்று கேட்டு குழந்தைகளுடன்  நூதன முறையில் - போராட்டம்திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு எஸ்டி காலணியில் மலைக்குறவ இன மக்கள் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தின கூலிகளாகவும், கூடை முடைதல், வயல்களில் பாம்பு, எலிகளைப் பிடித்தல் உள்ளிட்ட தொழிலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களது குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றிற்காக சாதி சான்று கோரி வருவாய் துறையில்  விண்ணப்பித்துள்ளனர்.

பல மாதங்கள் ஆகியும் மலைக்குறவ இன மக்களுக்கு சாதி சான்று வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து கூடைகளை முடைந்து அதிகாரிகளுக்கு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.மலைக்குறவ இன மக்கள் சாதி சான்று கேட்டு குழந்தைகளுடன்  நூதன முறையில் - போராட்டம்

பல ஆண்டுகளாக கல்வி வேலைவாய்ப்பில் பின் தங்கியிருந்த தங்களது குழந்தைகள் தற்போது தான் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளதாகவும் சாதி சான்று கிடைக்கப் பெறாததால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர். உடனடியாக தமிழ்நாடு அரசு தங்களது குழந்தைகளுக்கு சாதி சான்று வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மலைக்குறவர் இன மக்கள் பிரிவு இதுவரையில் கிடையாது எனவும், மலைக்குற மக்கள் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஜனவரி மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என்றும், ஊட்டியில் உள்ள பழங்குடியின ஆராய்ச்சி மையத்தில் இருந்து வந்து மக்களின் வாழ்வியல் முறைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் பேரில் உரிய விசாரணை நடத்தி மலைக்குறவ மக்கள் சான்றிதழ் வழங்கப்படும் என கோட்டாட்சியர் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்!

MUST READ