குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் அழைத்து பயன் பெறுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் சோலை கண்டிகை கிராம ஊராட்சி ஒன்றிய துவக்கப்பலில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
ஆவடி வட்டம் கொசவன் பாளையம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், பூந்தமல்லி வட்டத்தில் திருமணம் என்ற கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.
மேலும், ஊத்துக்கோட்டை வட்டம் ராமலிங்காபுரம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடை அருகிலும், திருத்தணி வட்டம் பழையனூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும்.
தொடர்ந்து, பள்ளிப்பட்டு வட்டத்தில் புண்ணியம் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடை அருகிலும், பொன்னேரி வட்டத்தில் உள்ள கொண்டக்கரை கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், கும்மிடிப்பூண்டியில் வட்டம் சாமி ரெட்டி கண்டிகை பகுதியில் உள்ள நியாய விலை கடை அருகிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
ஆர்.கே.பேட்டையில் கதன் நகரத்தில் உள்ள நியாய விலை கடையில் கடை அருகிலும் இந்த சிறப்பு முகங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.