- Advertisement -
சேலம் துணை மேயர் நடனம் சமூக வலைதளத்தில் வைரல்
கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து சேலம் மாநராட்சி துணை மேயர் நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சேலம் மாநகராட்சி துணை மேயர் கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து நடனமாடினார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சேலம் அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி கலந்து கொண்டார். அப்போது கல்லூரி மாணவிகள் துணை மேயர் சாரதா தேவியை தங்களுடன் சேர்ந்து நடனமாடும்படி அழைத்தனர். அவர்களின் கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட சாரதா தேவி மாணவிகளுடன் இணைந்து கலகலப்பாக நடனமாடினார்ல இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.