கரூர் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே 10 வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுமி வீட்டில் ஆடுகளை மேய்ச்சலுக்காக குடகனாறு ஆற்றுபாலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, சிவசுப்பிரமணியன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு, குற்றவாளி சுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.