பழைய ஆட்சியை குறை சொல்லி வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவருடைய ஆட்சியிலும் அதே குறைகள் இருப்பதை கண்டுகொள்ளாமல் மவுனமாக இருப்பது, இது போன்ற ஊழல்கள் மீண்டும் மீண்டும் நடப்பதற்கான அவருடைய சம்மதமாகவே கருத வேண்டி உள்ளது” என அறப்போர் இயக்கம் திமுக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது மகன்கள் மூலமாக சுமார் 411 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குற்றம்சாட் இருந்த நிலையில், ஜெயராமனுக்கு எதிராக அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திவாகர், 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூ. 411 கோடி மதிப்புள்ள உள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளார். ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோ அருகே பிஎஸ்என்எல் அலுவலகம் தாண்டியதும் இடது பக்கம் இருக்கக்கூடிய சுமார் 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என்று குற்றம்சாட்டினார் ஜெயராமன். இந்த புகார் உண்மையில்லை எனக் கூறி தங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை தெரிவித்தாக கூறி அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திவாகர், தனது வழக்கறிஞர் சரவணக்குமார் மூலம் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நிலத்தை அபகரித்ததாக ஜெயராமன் தவறான செய்தியை வெளியிட்டதாகவும், இதற்கு ஏழு நாட்களுக்குள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் 10 கோடி ரூபாய் இழப்பு வழங்கிட கோரி வழக்கு தொடர் இருப்பதாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திவாகர் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில், ‘‘மக்கள் பணம் கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் தன்னுடைய ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது முதல்வர் ஸ்டாலின் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்திருப்பார். அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு அமைச்சரிடம் இருந்து மீட்டு அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருப்பார்.
இந்த ஊழல் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு துணை போன அரசு அதிகாரிகளை வழக்கு பதிந்து பணி நீக்கம் செய்திருப்பார். ஆனால் இவை எதையும் செய்யாமல் விடியல் விடியல் என்று ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
திமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து சில அரசியல் கட்சிகள் பெயரளவிற்கு அறிக்கை அளித்து விட்டு மறந்து விட்டனர். சிலர் அது குறித்து பேச கூட திராணி இல்லாமல் முடங்கி கிடக்கின்றனர்.
ஊழல் கபடதாரிகள் என்று வசனம் பேசினால் மட்டும் போதுமா? அந்த ஊழல் குறித்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டாமா? பேசுவார்களா பார்க்கலாம்.
செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கும் மின்சார வாரியத்தில் நடைபெற்ற transformer கொள்முதல் ஊழல் குறித்து விரிவாக அறிந்து கொள்ள:
Transformer Scam – http://arappor.org/EB_Scam_400Crore
துரைமுருகன் அமைச்சராக இருக்கும் கனிமவளத்துறையில் நடைபெற்ற 700 கோடி கல் குவாரி ஊழல் குறித்து விரிவாக அறிந்து கொள்ள:
புகார் விவரங்கள்: https://arappor.org/tirunelveli-mining/
Video: https://youtu.be/5TMT14W52jc
என தங்கள் பதிவுகளில் உள்ள சுட்டிகளையும் இணைத்துள்ளது அறப்போர் இயக்கம்.