என்.கே.மூர்த்தி
என் தாய் நாட்டில் அல்லது என் வாழ்க்கையில் ஏதாகிலும் மாற்றம் நிகழ வேண்டும் என்று நினைத்தால், அது முதலில் என்னிடமிருந்து தான் தொடங்க வேண்டும். நான் மாறாவிட்டால் வேறு எதுவுமே மாறாது.

வெற்றி என்கிற சொல்லுக்கு எப்போதும் ஒரு வசீகரத் தன்மை இருக்கும். அதுவும் தேர்தலில் வெற்றி என்றால் சொல்லவே வேண்டாம். அதைப்பற்றி மணிக்கணக்கில், நாள் கணக்கில் பேசி பேசி மகிழ்ச்சி அடைவது வழக்கமானது.
ஆனால் 2026ல் நடைபெறப் போகின்ற சட்டமன்றத் தேர்தல் என்பது ஒரு அரசியல் கட்சியை வீழ்த்தி விட்டு இன்னொரு கட்சி ஆட்சியை பிடிக்கின்ற வழக்கமான தேர்தல் அரசியலாக கருதக் கூடாது.
இப்போது ஆர்.எஸ்.எஸ், பாஜக தமிழ்நாட்டின் மீது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை நடத்திக் கொண்டிருக்கிறது. இது நமது வருங்கால தலைமுறையினர் மீது நடத்துகின்ற நவீனகால உள்நாட்டுப்போர் என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய தாய் மொழியின் மீது, உங்கள் பிள்ளைகளின் கல்வியின் மீது, உங்கள் கலாச்சாரத்தின் மீது ஆர்.எஸ்.எஸ், பாஜக கும்பல் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த தாக்குதலை, படையெடுப்பை திமுக ஆட்சியில் இருப்பதனால் தடுத்துக் கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருப்பதனால் தடுக்க முடிகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
தமிழ்நாட்டில் மிகமுக்கிய எதிர்கட்சியான அதிமுக அனைத்தையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. வழக்குகளில் இருந்து அவர்களை காப்பாற்றிக் கொள்ளவும், அவர்களுடைய இரட்டை இலை சின்னத்தை பாதுகாத்துக் கொள்ளவும் நாட்டு நலனைப் பற்றி பேசுவதற்கு மறுக்கிறார்கள். தாய்மொழி தமிழை காவு கொடுக்க தயாராகி விட்டார்கள். நீட் தேர்வால் மாணவர்கள் மடிந்து கொண்டிருப்பதை கண்டுக் கொள்ளாமல் கடந்து செல்கிறார்கள்.
எதிர்க்க வேண்டியவற்றை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்க்காமல் மௌனமாக இருப்பது பெரும் பாவச்செயல் என்கிறார் ஆபிரிகாம் லிங்கன்.
அந்த பாவச்செயலை தற்போது அதிமுக செய்துக் கொண்டிருக்கிறது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பிகளும் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த பாவச்செயலை தமிழ்நாடு பாஜக தலைவர்களும் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றிப் பெற்றே தீரவேண்டும். அப்போது தான் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும். அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நம்மிடம் மட்டுமே இருக்கிறது என்கிற எண்ணத்தை உங்கள் ஆழ்மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு வேளை 2026 தேர்தலில் திமுக வெற்றிப் பெறவில்லை என்றால் தமிழ்நாட்டில் என்ன நடக்கும்?
நீங்கள் நேர்மையாக, நிதானமாக சிந்தித்து பார்த்தால் எவ்வளவு பெரிய ஆபத்துக்கள் தமிழ்நாட்டை சூழ்ந்திருக்கிறது என்பதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியும்.
ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் அறிவு பூர்வமான சித்தாந்தத்தில் பலவீனமானவர்கள். சாதியும், இஸ்லாம் , கிரிஸ்த்துவம் என்கிற மதமும் இல்லாவிட்டால் அவர்களுக்கு அரசியல் கிடையாது. அதனால் எல்லோருக்கும் எல்லாம் என்கிற சமத்துவத்தை பேசுகின்ற தமிழர்களை பழிவாங்க துடிக்கிறார்கள். அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், பலவீனமானவர்கள் எப்போதும் பலமானவர்களை பழிவாங்க துடிப்பார்கள் என்கிறார். அதனால் உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பரிசீலிக்கப்படாத ஒரு வாழ்க்கை மதிப்பற்ற வாழ்க்கை என்று தத்துவ மேதை சாக்ரட்டீஸ் வலியுறுத்தியுள்ளார். உங்கள் பணியில் தொடர்ந்து முன்னேறி செல்லும் போது, அவ்வப்பொழுது சற்று நிதானித்து “உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் மதிப்பீடு என்ன?” என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்வது அவசியம்.
அடுத்தது நீங்கள் சார்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நீங்கள் என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்கள்? அதேபோன்று தமிழ்நாட்டின் பொது எதிரியான ஆர்எஸ்எஸ்-பாஜக மீது என்ன மதிப்பீடு வைத்திருக்கிறீர்கள் என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டு மக்களும் திமுக தொண்டனும் எப்போதும் ஜனநாயகத்தை விரும்பக்கூடியவர்கள், “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் ” என்கிற சமத்துவத்தை போற்றக் கூடியவர்கள். அதை பாதுக்காக்க போராடி வருபவர்கள்.
ஆர்எஸ்எஸ், பாஜக காரர்கள் சனாதனவாதிகள். ஜனநாயகத்திற்கு நேர் எதிரானவர்கள். சாதி என்றும் மதம் என்றும் பேசிப்பேசி வெறுப்பை விதைத்து மனித ஒற்றுமையை சீர்குலைத்து, அதில் லாபத்தை பெறக்கூடியவர்கள்.
பால், நெய் ஆகியவற்றை தமிழர்களாகிய நாம் உணவுப் பொருள் என்கிறோம், மாட்டு மூத்திரத்தை கழிவுப் பொருள் என்கிறோம்.
ஆர்எஸ்எஸ், பாஜகவினர் பாலை மனச்சான்று இல்லாமல் குடம் குடமாக கொட்டுவார்கள், நெய்யை நெருப்பில் கொட்டி எரிப்பார்கள். மாட்டு மூத்திரத்தை குடிப்பார்கள், மற்றவர்களையும் குடிக்க சொல்லி வற்புறுத்துவார்கள்.
நம்முடைய மொழி “தமிழ்” நம்மொழியை உலகம் முழுவதும் 10 கோடி பேருக்கு மேல் பேசுகிறார்கள். நம்முடைய நாடு தமிழ்நாடு.
அவர்களுடைய மொழி சமஸ்கிருதம், அதுவும் பேச்சு மொழி கிடையாது. அவர்களுக்கென்று மாநிலமோ, நாடோ கிடையாது. நாடு அற்றவர்கள் நமது நாட்டை சூரையாட முயன்று கொண்டிருக்கிறார்கள். நாடு அற்றவர்கள் இந்தியாவே எங்கள் நாடு என்கிறார்கள்.
இப்படி நமக்கும் அவர்களுக்கும் ஆயிரமாயிரம் வேறுபாடுகள் இருக்கிறது. அவர்கள் ஒருபோதும் நமக்கு நண்பர்களாகவோ, நமக்கு நன்மை செய்யக் கூடியவர்களாகவோ இருக்க மாட்டார்கள். இருக்கவும் முடியாது.

நீங்கள் வெற்றிகரமான ஏணி என்று நினைத்து தட்டுத்தடுமாறி ஏறி விட்டால் மட்டும் போதாது, அந்த ஏணி சரியான சுவரில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் சீனாவின் புரட்சியாளர் மாசேதுங்.
தட்டுத்தடுமாறி முதலமைச்சர் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி, யாரால் பதவிக்கு வந்தோம், எந்த சுவரில் சாய்ந்துக் கொண்டு இருக்கும் ஏணியில் நின்றுகொண்டு நான்கு ஆண்டு காலம் அதிகாரத்தில் இருந்தோம் என்பதை கவனிக்க தவறினார். மதிப்பீடு செய்ய தவறினார். ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தார். தற்போது அவர் சாய்ந்துகொண்டு இருக்கும் பாஜக என்கிற சுவர் எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பதை உணரத் தவறிவிட்டார். வரலாற்று பிழையை செய்திருக்கிறார் என்பதை காலம் அவருக்கு உணர்த்தும்.
நீங்களும், நீங்கள் சார்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் நமது தாய் நாட்டை பாதுகாக்க எதையும் தியாகம் செய்யக் கூடியவர்கள் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். தாய் மொழிக்காக உயிரை தியாகம் செய்தவர்கள் திமுக தொண்டர்கள் என்ற பெருமையுடன் மற்றவர்களிடம் எடுத்து சொல்லுங்கள். மீண்டும் ஒருமுறை தத்துவ மேதை சாக்ரடீஸ் கூறியுள்ளதை மனதில் கொள்ளுங்கள், பரிசீலிக்கப்படாத ஒரு வாழ்க்கை, மதிப்பற்ற வாழ்க்கை.
நீங்கள் பெரிதும் விரும்பும் 2026 தேர்தலைப் பற்றி மட்டும் சிந்திப்பதென்றும், அதைப்பற்றி மட்டும் பேசுவதென்றும் இப்போதே உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். எது எது உங்களுக்கு பிடிக்க வில்லையோ அவற்றைப் பற்றிப் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

உங்களுடைய மிக உயர்ந்த சிந்தனைக்கு ஏற்ற வழிகளில் நீங்கள் நடந்துக் கொள்ளவும், பேசவும் துவங்கும்போது உங்கள் மீதான மதிப்பீடு மேம்படுகிறது. உங்கள் சுய மதிப்பு அதிகரிக்கிறது. உங்களைப் பற்றியும், உங்கள் கட்சியைப் பற்றியும் நீங்கள் அதிக மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.
உதாரணமாக, உங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகியோ, மாநில நிர்வாகியோ அல்லது தலைவரோ உங்கள் செயல்பாடுகளை கேள்விப்பட்டு பாராட்டும் போது உங்கள் சுய மதிப்பு அதிகரிக்கிறது. நீங்கள் உங்களைப்பற்றி மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள். நீங்கள் முக்கியமானவர், மதிப்பு வாய்ந்தவர் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். அதனால் உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுங்கள். 2026ல் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்துங்கள்.