Homeசெய்திகள்தலையங்கம்மணிப்பூர்- சாதித் தீயில் எரிகிறது..

மணிப்பூர்- சாதித் தீயில் எரிகிறது..

-

மணிப்பூர்- சாதித் தீயில் எரிகிறது

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சாதி சண்டையினால் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. மனித உடல்கள் சாலையில் சடலமாக கேட்பாரற்று கிடக்கின்றன.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தை சார்ந்தவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த மே மாதம் 3 ம் தேதி மைதேயி சமூகத்தினர் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். இதற்கு மற்ற பழங்குடியினத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“குகி” சமூகத்தினர் அதிகமாக வாழும் பகுதியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மைதேயி, குகி ஆகிய இரு சமூகத்தினர்களும் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றனர். வீடுகளை, கடைகளை, வணிக நிறுவனங்களை, விவசாய நிலங்களை இறுதியில் மனிதர்களை கொளுத்தி, அழித்து வருகின்றனர்.

மணிப்பூர்- சாதித் தீயில் எரிகிறது

தற்போது மணிப்பூர் மாநிலம் இரண்டாக பிரிந்து அழிந்துக் கொண்டிருக்கிறது. மணிப்பூரையும் இந்தியாவையும் ஆண்டுக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கிரிஸ்த்துவ மதத்தை பின்பற்றி வந்த “குகி” சமூக மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்து மதத்தை பின்பற்றி வரும் “மைதேயி” சமூகத்தனர் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு இல்லாமல் போராடி வருகின்றனர். இதே காரணங்களின் அடிப்படையில் “குகி” சமூகத்தினர் வாழும் பகுதியிலும் அவர்களின் நிலத்தையும் “மைதேயி” சமூகத்தினர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுவே இரண்டு சமூகத்தினரும் மோதிக் கொள்வதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

மணிப்பூர், சுமார் 30 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட சிறிய மாநிலம். அதில் மைதேயி மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மலைப் பகுதிகளில் நான்கு மாவட்டங்களில் குகி சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

அரசின் கணக்குப்படி குகி சமூகத்தினர் வழிப்படுகின்ற 250 தேவாலயங்களும், 2000 வீடுகளும் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று மைதேயி மக்களின் கோயில்களும், வீடுகளும் எரிக்கப்பட்டுள்ளது. 50,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பிற்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நமது பிரதமர் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள், யோகா செய்யுங்கள் என்று மக்களுக்கு பாடம் நடத்துகிறார். உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்த அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மணிப்பூர்- சாதித் தீயில் எரிகிறது

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மே மாதம் 29ம் தேதி 4 நாள் பயணமாக மணிப்பூர் சென்றார். ஆலோசனை நடத்தினார். ஆனால் கலவரம் நிற்கவில்லை. நீடித்துக் கொண்டு இருக்கிறது. 50 நாட்களாக ஒரு மாநிலம் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சாம்பலாகியுள்ளது. கோயில்கள், தேவாலயங்கள், கடவுள்கள் இடிக்கப்பட்டுள்ளது. கலவரம் மணிப்பூரில் இருந்து அருகில் உள்ள மிசோரம் மாநிலத்திற்கும் பரவத் தொடங்கியுள்ளது.

கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டியவர்களின் மனமும் சுத்தமாக இல்லை. அழுக்காக இருக்கிறது. பிரச்சனையின் ஆழத்தை புரிந்துக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். மனதளவில் வன்முறையை விதைக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். கலவரத்தை கட்டுப்படுத்த சென்ற ராணுவ வீரர்கள், காவல்துறையினர் கலவரத்தை மேலும் அதிகப்படுத்துகிறார்கள். கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும், உயிரிழப்பை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் பிரதமருக்கோ, அவர் தலைமையின் கீழ் இயங்கும் அரசுக்கோ சிறிதும் இல்லை. அதனாலதான் பிரதமர் மோடி எதுவும் பேசாமல் வெளிநாடு சென்றுவிட்டார்.

மணிப்பூர் கலவரம் அரசியலாக்கப்படுகிறது. அது மற்ற மாநிலத்திற்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதில் ஏதோ உள் நோக்கம் இருப்பதாகவே கருதத் தோன்றுகிறது. ஒரு நெருப்பை இன்னொரு நெருப்பால் அணைக்கவே முடியாது. மணிப்பூரில் எல்லாமே நெருப்பாகவே இருக்கிறது.

– என்.கே.மூர்த்தி

MUST READ