Homeசெய்திகள்தலையங்கம்பாஜகவின் மூன்று திட்டங்கள்..

பாஜகவின் மூன்று திட்டங்கள்..

-

பாஜகவின் மூன்று திட்டங்கள்…

கடந்த 2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது “தமிழ்நாட்டின் லேடியா, குஜராத்தின் மோடியா” பார்த்துவிடுவோம் என்று பாஜகவிற்கு எதிராக ஜெயலலிதா ஆக்ரோஷமாக முழக்கமிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் பாஜகவிற்கும் தமிழ்நாட்டிற்கும் கடும் மோதல் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் அடுத்த ஆண்டு மே- மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவும் வழக்கமான தனது மிரட்டல் அரசியலை தொடங்கிவிட்டது.

பாஜகவிற்கு செல்வாக்கு இல்லாத டெல்லி, தெலுங்கானா, மகாராஷ்ட்டிரா, மேற்குவங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தனது அதிகார தோரணை அரசியலை செய்து வருகிறது.

மதுபான கொள்கையில் ஊழல் செய்துள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 27 ம் தேதி கைது செய்தனர். தமிழ்நாடாடில் அமைச்சர் செந்தில்பாலாஜியையும் கைது செய்து அரசியல் விளையாட்டை ஆடத் தொடங்கியுள்ளனர்.

பாஜக

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் ஆன்மீகம் என்ற பெயரிலும், இந்து என்ற பெயரிலும் அரசியல் செய்யும் பாஜக வலையில் மக்கள் விழுந்து விடுவார்கள். ஆனால் தமிழ்நாடு அரசியல் பாஜக கொள்கைக்கு நேர் எதிராக உள்ளது.

தமிழ்நாடு ஆன்மீகமும் பகுத்தறிவும் கலந்து சிந்திக்கும் ஆற்றல் உள்ள மக்கள் அதிகம் வாழும் மாநிலம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியில் முதன்மையான மாநிலமாக இருப்பதற்கு யார் காரணம் என்பதை சிந்திக்கக் கூடியவர்கள் அதிகம் இருப்பதால் பாஜகவின் செயல் திட்டங்கள் எதுவும் எடுபடவில்லை.

தமிழ்நாட்டில் 0 கணக்கில் இருக்கும் பாஜக, புதிய கணக்கை தொடங்க வேண்டும் என்பதற்காக பல வகைகளில் முயற்சி செய்து வருகிறது.

எதிர்க்கட்சிகள்

மூன்று திட்டங்கள்

முதல்கட்டமாக மூன்றுவகையான செயல் திட்டங்களை முன் வைத்து அரசியல் செய்து வருகிறது.

தமிழக பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலையை நியமனம் செய்தனர்.

அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து ரகசிய வீடியோ எடுப்பதும், ஆடியோவை பதிவு செய்து வெளியிடுவதும் ஒரு திட்டமாக வைத்து அரசியல் நாகரீகத்திற்கு புதிய கலாச்சாரத்தை உருவாக்கி வருகின்றார். தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளிகள், கட்டப் பஞாசாயத்து ரவுடிகள், நீதிமன்றத்திற்கே போகாத வழக்கறிஞர்கள் என்று சமூக விரோதிகளை பாதுகாக்கும் கூடாரமாக தமிழ்நாடு பாஜக வை மாற்றி, அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி வருகின்றார்.

இரண்டாவது – மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர், ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை செயல்பட விடாமல் செய்வது. முதலமைச்சரை விட ஆளுநருக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்ற பிம்மத்தை கட்டமைப்பது.

மூன்றாவது உள்துறை அமைச்சரின் அதிகாரத்தில் உள்ள சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய தன்னாட்சி அமைப்புகளை வைத்துக் கொண்டு பாஜகவிற்கு எதிராக உள்ள மாநில அரசுகளை மிரட்டுவது, அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்வது, சிலரை கைது செய்வது என்ற மிரட்டல் அரசியலை செய்வது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த மூன்று திட்டங்களையும் வைத்துக் கொண்டு ஆளும் கட்சி, எதிர்கட்சிகளை மிரட்டி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது.

மாநில அரசுக்கு எதிராக பேசும் ஆளுநரின் செயல்பாட்டை திமுக தலைவர் உடனுக்குடன் கண்டித்தும், விளக்கம் அளித்தும் வருவதால் ஆளுநர் பேச்சில் உண்மையில்லை என்று மக்களுக்கு புரியத் தொடங்கியுள்ளது. அதேபோல் அண்ணாமலை தலைமையை ஏற்றுக்கொண்டு கட்சிக்கு வந்தவர்களில் பெரும்பாலனவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்பது மக்களுக்கு தெரியத் தொடங்கியுள்ளது. அதுவும் தோல்வியில் முடிந்துவிட்டது.

தற்போது அமலாக்கத்துறையை வைத்து தங்களுடைய அரசியல் விளையாட்டை தொடங்கியுள்ளனர். இது எந்த அளவிற்கு பலன்கிடைக்கும் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மத்திய அரசால் உருவாக்கப்பட்ட விசாரணை அமைப்புகள் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் மட்டும் நடவடிக்கையில் இறங்குவது ஏன்? பாஜக ஆளும் மாநிலத்தில் ஊழலே நடைபெற வில்லையா? மத்திய அரசு அதானி, அம்பானி போன்ற பெரும் நிறுவனங்களுக்கு உதவி செய்துவருவதாக எழுந்த புகார் குறித்து விசாரணை செய்யாதது ஏன்? என்று ஏராளமான கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.

MUST READ