Homeசெய்திகள்தலையங்கம்தமிழ்நாடு அரசுக்கு எதிராக சதியா ?

தமிழ்நாடு அரசுக்கு எதிராக சதியா ?

-

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் மற்றும் அரசு இயந்தரங்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்தால் ஒரு அசாதாரண சூழல் நிலவி வருவதை காணமுடிகிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக 2023ம் ஆண்டு மே 23ம் தேதி சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றார். மே 31ம் தேதி இரவு தமிழ்நாடு திரும்பினார். முதலமைச்சா் வெளிநாடு சென்ற இந்த 9 நாட்களில் நடக்கக் கூடாத நிகழ்வுகள் எல்லாம் நடைபெற்றுள்ளது.

தமிழ் நாடு அரசுக்கு எதிராக சதியா ?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் பின்னணியில் பாஜக இருப்பது அனைவருக்கும் தெரியும். அதில் சில உயர் அதிகாரிகளும் மறைமுகமாக அரசுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என்பது நிறைய பேருக்கு தெரியாது.

அந்த சோதனையின் போது உணர்ச்சிவசப்பட்ட திமுக தொண்டர்களுக்கும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டு, அப்பாவி தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை செய்தி நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தமிழ் நாடு அரசுக்கு எதிராக சதியா ?

அதேப்போன்று போக்குவரத்து துறையில் ஒவ்வொரு பணிமனையிலும் ஒப்பந்த தொழிலாளர்களை (Out Sourced labour) பணி நியமனம் செய்ய முயற்சி செய்துள்ளனர். தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நியமனத்தை எதிர்த்து ஆளும் கட்சி தொழிற்சங்கத்தினருடன் அனைத்து தொழிற்சங்கத்தினர்களும் இணைந்து நேரடியாக களத்தில் இறங்கி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் சென்னையில் 33 பணி மனைகளில் மட்டும் நடந்திருந்தாலும் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்த போராட்டத்தினால் பொது மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டனர்? எதற்காக இந்த திடீர் போராட்டம்? அதுவும் ஆளும் கட்சியை சேர்ந்த தொழிலாளர்களே நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்றால் இந்த அரசு அவ்வளவு மோசமாகவா செயல்படுகிறது என்று பொதுமக்கள் புலம்பி தீர்த்தனர்.

முதலமைச்சர் இல்லாத காலக்கட்டத்தில் அவருடைய அரசுக்கு எதிராக இப்படி ஒரு போராட்டத்தை தூண்டிவிடும் செயலை மாநிலத்தின் உயர் பதவியில் இருப்பவர்களைத் தாண்டி வேறு யாரால் செய்யமுடியும்? அந்த துறை செயலாளரருக்கு தெரியாமல் பணி மனைக்குள் “அவுட்சோர்சிங்” ஆட்களை அனுப்ப முடியுமா? துறை செயலாளருக்கு தெரிந்துதான் இந்த வேலை நடைப்பெற்றது என்றால் அவருடைய நோக்கம் என்ன?

தமிழ் நாடு அரசுக்கு எதிராக சதியா ?

அப்படி “அவுட்சோர்சிங்” மூலமாக ஆட்களை வேலைக்கு சேர்த்தால், வருடக் கணக்கில் உழைத்து வரும் போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர்களின் எதிர்ப்பை வேலை நிறுத்தத்தின் வாயிலாக வெளிப்படுத்துவார்கள். அதனால் மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள், கொந்தளிப்பார்கள். அதன் மூலம் முதலமைச்சர் மீதும், அரசாங்கத்தின் மீதும் வெறுப்பு ஏற்படும். இதுதான் அதிகாரிகளின் உள் நோக்கம். இதற்கு மாநிலத்தில் உள்ள சில ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் பணி மனை மேலாளர்கள் வரை உடந்தையாக இருந்திருக்கலாம் என்று கணிக்க தோன்றுகிறது.

தமிழ் நாடு அரசுக்கு எதிராக சதியா ?

மாநில அரசுக்கு அவப்பெயரை உருவாக்குவதனால் இந்த அதிகாரிகளுக்கு என்ன லாபம்? அவர்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? என்ற சந்தேகம் எழலாம்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 350 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் தான் அரசாங்கம். இவர்கள் தான் ஆட்சி. இவர்கள் வைத்ததுதான் சட்டம். ஆட்சியாளர்களை, அமைச்சர்களை கத்தி இல்லாமல், ரத்தத்தை வரவழைக்காமல் சுலபமாக காலி செய்து விடுகின்ற வல்லமைப் படைத்தவர்கள். அவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள். இவர்களை மீறி எந்த அரசியல் வாதிகளாலும் எதுவும் செய்ய முடியாது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டார். அவருடை தோழி சசிகலாவை சிறையில் வைத்தார்கள். ஆனால் அனைத்து ஊழலுக்கும் காரணக் கர்த்தாவாக இருந்த அப்போதைய தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை. இதுதான் இந்த நாட்டில் எழுதப்படாத விதி. இதுவரை எந்த வழக்கிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. தவறு செய்வது, தவறுக்கு உடந்தையாக இருப்பது ஐஏஎஸ் அதிகாரிகள் தான். ஆனால் தண்டனை பெறுவது மட்டும் அரசியல் வாதிகள்.

ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் தான். அவர்களும் சாதியாகவும், மதமாகவும் பிரிந்து செயல்படக் கூடியவர்கள் தான். அந்த அடிப்படையில் திராவிட அரசியலுக்கும், திமுகவிற்கும் எதிராக செயல்படக் கூடியவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக வால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள். இப்போதும் மத்திய அரசை ஆட்சி செய்யும் பாஜகவிற்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள். பாஜகவின் திட்டத்தை செயல்படுத்தக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் போக்குவரத்து தொழிலாளர்களை வேலை நிறுத்தம் போராட்டத்திற்கு தூண்டிவிட்டது.

முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த போது நடைபெற்ற இந்த செயல்கள் மன்னிக்க முடியாத குற்றம். யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

MUST READ