தலைகுனிவு

-

- Advertisement -

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் போராட்டம் நடவடிக்கையினால் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.தலைகுனிவுஅண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினியரிங் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த ஐந்து மணி நேரத்தில் ஞானசேகரன் என்ற பிரியாணி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

மேலும் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து, இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

உலகப் புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் தான் வேந்தர். அவருடைய நிர்வாகத்தின் கீழ் துணை வேந்தரை நியமனம் செய்யாமல் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருபவர் ஆளுநர். அவரை கண்டித்து தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சிகளும் அறிக்கை கூட விடுவதற்கு தயாராக இல்லை. ஆனால் திடீரென்று நடைபெறும் ஒரு விபத்தை போன்று நடந்துள்ள பாலியல் சம்பவத்திற்கு மாநில அரசு மீது பழியை போட்டு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் அல்லது அறிக்கை விடுவதற்கும் அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாமக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகளுக்கு வேறு காரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு எதை வைத்து அரசியல் செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பது தெளிவாக தெரிகிறது.

ஒரு பெண் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டபூர்வமாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ தமிழக அரசு எடுத்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டியது நம் அனைவருக்கும் உள்ள பொறுப்பு என்பதை எதிர் கட்சிகள் மறந்துவிட்டது.

உயர் நீதிமன்றம் கண்டனம்.

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாதுகாப்பிற்காக போராடுபவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்து சொல்லுங்கள். எத்தனைப் பேர் தன் தாய், மனைவி, மகளுக்கு மரியாதை கொடுக்கிறீர்களா? சுதந்திரம் கொடுக்கிறீர்களா? முதலில் தங்கள் வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் என்று உயர் நீதிமன்றம் அரசியல் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. இதற்காக அனைவரும் வெட்கப்பட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை நாம் அனைவரும் குற்றவாளிதான். நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளது. இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வெறும் விளம்பரத்திற்காக போராட்டம் நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் கண்டித்துள்ளது.

தமிழக எதிர்கட்சிகள் பாதிக்கப்பட்ட மாணவியை மைய்யமாக வைத்து அரசியல் ஆதாயத்திற்காக தேவையற்ற போராட்டங்களை நடத்திவருவது மேலும் மேலும் அந்த மாணவிக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும். இதை நீதிமன்றமும் கண்டித்துள்ளது. இப்படிபட்ட போராட்டம் தமிழர்களுக்கு  தலைகுனிவை ஏற்படுத்துவதை தவிர வேறு எந்த நன்மையும் ஏற்படுத்தாது.

அண்ணா பல்கலை. விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கள்ள ஆட்டம்…  ஆளுநரின் செயல் மட்டகரமானது… வழக்கறிஞர் சரவணன் விளாசல்!  

MUST READ