Homeசெய்திகள்தலையங்கம்கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்

கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்

-

கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்.

கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்.

சென்னை மெரினா கடலுக்குள் கலைஞரின் இலக்கியப் பணியை போற்றும் வகையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பலர் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்திருந்தனர்.

காரைக்குடியில் பட்டா நிலத்தில் வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலையை ஆதிக்க வர்க்கம் அகற்ற துடிக்கிறது. இன்னொரு பக்கம் கலைஞருக்கு சிலை வைத்தால் உடைப்பேன் என்று சிலர் துள்ளி எழுகிறார்கள். இரண்டு குரலும் ஒரே மாதிரி ஒலிக்கிறது.

கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று அவர்களுக்காக பேசியும், எழுதியும் வந்தவர்கள் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர். இந்த தலைவர்களுக்கு சிலை வைத்தால் கண்ணை குருடாக்கிக்கொண்டு உடைப்பதையும், எதிர்பதையும் சிலர் வழக்கமாகிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது சீமானும் இணைந்து கொண்டார்.

கலைஞர் கருணாநிதி என்பவர் யார்? அவர் பேச்சாற்றலால் இன எழுச்சியை ஏற்படுத்தியவர், தன் எழுத்தால் தமிழர்களின் வாழ்க்கை தரத்தை தலை நிமிர செய்தவர்.

கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்.

14 ஆம் வயதில், எழுத்துவதற்காகத் தலைகுனிந்த அந்தப் பேனா, இன்று வரையில், எத்தனையோ தமிழர்களைத் தலைநிமிர வைத்துள்ளது!
முழுநேர எழுத்தாளர்களால் கூட எழுத முடியாத அளவிற்கு எழுதிக் காட்டியவர் கலைஞர்! அவருடைய வாழ்க்கை வரலாறு மட்டும் 6 தொகுதிகள் – 4162 பக்கங்கள்!
உடன்பிறப்புக்கு ஓயாமல் கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.

75 திரைப்படங்களுக்கான கதை, வசனம் எழுதி சாதித்திருக்கிறார்.
திருக்குறள் முதல் தொல்காப்பியம் வரை பல இலக்கிய நூல்களுக்கு உரை எழுதிய கலைஞர், சங்க இலக்கியத்தில் உள்ள பொருத்தமான 100 பாடல்களுக்கு புதுக்கவிதையில் விளக்கக் கவிதைகளை எழுதி பெரும் வரவேற்பை பெற்றார்.

கலைஞர் கருணாநிதி முதன்முதலில் தனது 23வது வயதில் கதை, வசனம் எழுதிய திரைப்படம் ராஜகுமாரி. 1947ல் வெளிவந்த இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர். முதன்முதலாக முன்னணி வேடத்தில் நடித்தார்.

கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்.

அது மிகப் பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது. அதன் பின்னர் எம்ஜிஆருக்கு திரையுலகில் நிரந்தர இடம் கிடைத்தது. சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரின் வெற்றியிலும் கலைஞர் கருணாநிதியின் அபார பங்களிப்பை தவிர்த்து விட முடியாது.

நடிகர் திலகம் சிவாஜிக்கு பராசக்தி திருப்பு முனையாக அமைந்ததை போல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன் படங்கள் மாபெரும் வெற்றியை தந்தது. ‘பராசக்தி’ படத்தைப் பற்றி பேசாதவர்களே இருக்க முடியாது. ஆத்தீகத்தை எதிர்த்து நாத்தீகர் கருணாநிதி எழுதிய வசனங்களில் அனல் பறந்தன.

” யார்… அம்பாளா பேசுவது?”, “முட்டாள்… அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள்?” “கோயில் கூடாது என சொல்லவில்லை, அது கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதே என் வருத்தம்”, “ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினாள்” என ஒவ்வொரு வசனத்திலும் திராவிட தீ பற்றி எரிந்தது.

பராசக்தி படத்தில் வரும் நீதிமன்ற காட்சியை பேசி பழகாதவர்களே தமிழ் சினிமாவில் இருக்க முடியாது என்று கூறலாம்.

கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்.

தொடரந்து மனோகரா, ராஜா ராணி, புதையல், புதுமை பித்தன், காஞ்சி தலைவன், பூம்புகார், இருவர் உள்ளம் என தொடர்ந்து சினிமா, அரசியல், இலக்கியம், பத்திரிக்கை பணி என கலைஞர் கருணாநிதியின் பேனா மின்னல் வேகத்தில் முன்னேறிச் சென்றுக் கொண்டிருந்தது.

21 நாடகங்களை எழுதிய கருணாநிதி, 75 படங்களில் பணியாற்றியிருக்கிறார். இவற்றில் கலைஞர் கருணாநிதி கதை – வசனம் எழுதி எம்ஜிஆர் நடித்த 9 படங்களும் எம்.ஜி.ஆருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

படத்தின் ஹீரோவை விட அதிக தொகையை ஊதியமாகப் பெற்றவர் கலைஞர். 1969-ல் அவர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே 25 படங்களுக்கு மேல் கதை வசனம் எழுதியிருந்தார். அரசியல், சினிமா, இலக்கியம், பத்திரிக்கை என எல்லாவற்றிலும் ஒருவர் சிறந்து விளங்க முடியுமா என்றால்? ஆம்! முடியும் அவர் பெயர் தான் கலைஞர் கருணாநிதி!

கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்.

“நீண்டதூரம் ஓடினாள்தான் அதிக தூரம் தாண்ட முடியும்” என்ற பழமொழி கலைஞருக்கு மிகவும் பிடிக்கும். பதிநான்கு வயதில் எழுத தொடங்கிய அவர் 80 ஆண்டு காலம் தொடர்ந்து எழுதினார். இந்த வரலாற்று உண்மையெல்லாம் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவே “கலைஞரின் பேனா சிலை”
கலைஞரின் சாதனைகளை மறைக்கின்ற முயற்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜகவும் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், இலக்கியச் சித்திரங்கள் என்று எல்லாவற்றையும் எழுதிக் குவித்த அந்தப் பேனா, சிலையாக நின்று இன்னும் பலரை எழுதத் தூண்ட வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்காகவே பேனா சிலை! “நான் எழுதவில்லை, விரல்களால் சிந்திக்கிறேன்” என்பார் எழுத்தாளர் ஐசக் ஆசிமோவ். அது கலைஞருக்கும் பொருந்தும்.

அது சரி, அதற்காக 80 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தைச் செலவழிப்பதா என்று குமுறுகிறார்கள். அந்தப் பணத்தில் மக்களுக்கு நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாதா என்று கேட்கின்றனர்.

மக்களுக்கான பல நல்ல திட்டங்களை அறிவித்தபோதெல்லாம், இப்படி இலவசத் திட்டங்களால், மக்களைச் சோம்பேறி ஆக்குகின்றனர் என்று ஆதங்கப்பட்ட அதே மனிதர்கள்தான் இப்போது இப்படிப் பேசுகிறார்கள்!

மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவது எப்படி ஒரு அரசின் கடமையோ, சிலை அமைப்பது, மண்ணின் பண்பாடு, கலாச்சாரங்களை பாதுகாப்பதும் அரசின் வேலைதான் என்பதை மறந்து விட்டார்கள்.

கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்.

கலைஞருக்கு சிலை ஏன் வேண்டும்?

இந்தியாவின் தெற்கு எல்லையில் கன்னியாகுமரியின் அடையாளமாக விவேகானந்தர் பாறைதான் இருந்தது. அந்த பாறையில் ஒரு காவிக் கொடியும்பறந்தது. அதாவது தெற்கே குமரி முதல் வடக்கே காஷ்மீர் வரை காவிகளின் ராஜ்ஜியத்தை குறிக்கும் அடையாளமாக இருந்துவந்தது. அந்த அடையாளத்தை மாற்றி தமிழர்களின் அடையாளத்தை நிறுவ கலைஞர் 1975ல் திட்டமிட்டார்.

25 ஆண்டுகள் பல சோதனைகளை கடந்து தன் விடா முயற்சியினால் உலகப் பொதுமறையை தமிழுக்குத் தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலையை 2000ம் ஆண்டில் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் நிறுவினார். அந்த சிலையின் வாயிலாக இந்தியாவின் வரலாறு தமிழர்களிடம் இருந்து தொடங்குகிறது என்று உலகிற்கு உணர்த்தினார் கலைஞர் கருணாநிதி. அதை போன்று நீண்ட காலமாக மூட நம்பிக்கையினால் படிப்பரிவு இல்லாத ஒரு இனத்தை தன் அறிவு பேனாவினால் தட்டி ஏழுப்பிய தலைவனுக்கு சிலை வைப்பது காலத்தின் தேவை.

கலைஞர் கருணாநிதியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம் ஆனால் தமிழ்நாடு வரலாற்றில் இருந்து அவரை ஒதுக்கிவிட முடியாது.

என்.கேமூர்த்தி

MUST READ