விவசாய பட்டா நிலத்தில் பயிரை அழித்து பாசன கால்வாய் அமைக்க வந்த தாசில்தாரை முற்றுகையிட்டு திருப்பி அனுப்பிய விவசாயிகள்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே நெமிலிச்சேரியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த ஆட்சி காலத்தில் கால்வாயை ஆக்ரமித்து மனைப்பிரிவுபோட்டு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆக்ரமிப்பிற்கு உள்ளான கால்வாய் திருநின்றவூர் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் ஒரு முக்கிய கால்வாயாக இருந்துள்ளது. தற்போது பருவ மழை பெய்து வருவதால் ஆகரமிக்கப்பட்ட கால்வாயை மீட்காமல் அதன் அருகில் உள்ள விவசாய பட்டா நிலத்தில் கால்வாய் தோண்டுவதற்கு ஆவடி வட்டாட்சியர், பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஆகியோர் சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி விவசாயிகள் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இந்த இடத்தில் கால்வாய் பணியை மேற்கொள்ள கூடாது என்று கூறி அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு, பட்டாபிராம் காவல் ஆய்வாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது விவசாயி ஒருவர் எங்கள் இடத்திற்கு உரிய பட்டா இருப்பதாகவும் அதில் பயிர் நடவு செய்து ஒரு மாதம் மட்டுமே ஆகிறது என்று தெரிவித்தனர்.
மேலும் இதற்காக நாங்கள் உரிய அரசு துறைகளில் பலமுறை புகார் அளித்து அதன் அனைத்து ஆவணங்களையும் பட்டாராம் ஆய்வாளரிடமும் துணை வட்டாட்சியரிடமும் ஆதாரங்களை காட்டி அவர்களை திருப்பி அனுப்பினார்கள்.
மேலும் எங்கள் விவசாய நிலத்தில் நீங்கள் கால்வாய் பணி மேற்கொண்டால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்றும் காலகாலமாக இருந்த கால்வாயை மறைத்து நில விற்பனை செய்தவர் நிலத்திலேயே மீண்டும் தற்காலிக கால்வாய்ப்பணி மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் 2020 முதல் வருவாய்துறை அதிகாரி வட்டார வளர்ச்சி துறை அதிகாரி மாவட்ட ஆட்சித்துறை ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் இது சம்பந்தமாக புகார் அளித்தும் அங்கு கால்வாய் பணிகளை மேற்கொள்ளாமல் விவசாய நிலத்தில் கால்வாய் பணி ஏன் மேற்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
கால்வாய் பணிக்காக கொண்டுவரப்பட்ட மழை நீர் வடிகால் ராட்சதக் குழாய்கள் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் அந்த குழாய்களை அப்புறப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே கால்வாய் இருந்த இடத்திலே இந்த குழாய்களை அமைத்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக என்று பேட்டி அளித்துள்ளனர்.