அன்பபெல் மொழி பெயர்ப்பு நிறுவனம் மொழி பெயர்ப்பு சேவைக்கென சிறப்புத் தொழில் நுட்பத்துடன் கூடிய ஏஐ தொழில் நுட்பத்துடன் கூடிய செயலியை அறிமுகம் செய்துள்ளதாக அந்நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி சாஸ்கோ பெட்ரோ சிஎன்பிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் மொழி பெயர்க்கும் தேவை இந்த தொழில் நுட்பத்தால் இன்னும் மூன்றாண்டுகளில் இல்லாமல் போய் விடும் எனவும் அவர் கணித்துள்ளார்.
தெளிவான மொழி பெயர்ப்புக்கு மாறும் ஏஐ
அன்பபெல் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ஏஐ செயலி மாபெரும் மொழி பெயர்ப்பு மாடல் டவர் என்று அழைக்கப்படும். இந்த ஏஐ செயல்பாடு முன்னேற்றத்துடன் கூடிய புரிந்து கொள்ளக்கூடிய மனிதர்கள் விரும்பும் வகையிலான மொழி பெயர்ப்பை வழங்கக் கூடியது. இந்த டவரில் மனித உதவியின்றி 32 வெவ்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து மாற்றக்கூடிய அனைத்தும் உணர்த்தும் மேம்பட்ட மாதிரியாக இருக்கும்.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு நிறுவப்பட்ட அன்பபெல் ஏஐ தொழில் நுட்பம் வருவதற்கு முன்பே சுதந்திரமான மொழிபெயர்ப்புகளை கையாண்டுள்ளது. இந்த நிறுவனம் ஆரம்ப காலகட்டத்தில் இயந்திரங்களோடு இயைந்து எடிட்டர்கள் மொழிபெயர்ப்பின் துல்லியத்தை உறுதி செய்துள்ளனர். இப்போது அன்பபெல் நிறுவனம் சிக்கலான மொழிபெயர்ப்புகளையும் நிர்வகித்து சரியான வகையில் மொழிபெயர்த்து வழங்குகிறது.
ஏஐ தொழில் நுட்பத்தின் மிகப்பெரிய போட்டியாளர்களான கூகுள், ஜெர்மன் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீபெள் உள்ளனர். இந்த நிறுவனங்கள் பல மொழிகளில் மிகப்பெரிய மொழி பெயர்ப்பு பணிகளை செய்து அந்நில செலவாணி ஈட்டு வருகின்றன.
சந்தையை கைப்பற்றும் நம்பிக்கையில் அன்பபெல் நிறுவனம் முழு உத்வேகத்துடன் மொத்தமாக ஏஐ தொழில்நுட்பத்தை மனத்தில் கொண்டு இயங்கி வருகிறது. ஏஐ தொழில் நுட்பத்தால் வருமானம் குறைந்தாலும் மொழி பெயர்ப்பு உலகில் அதிக பொருளீட்ட முடியும்.
எப்படி இருப்பினும் மொழிபெயர்ப்பின் அளவை, தேவையை பெரிதளவில் விரிவுபடுத்தி நிதி ஆதாராத்தை விரிவாக்கம் செய்வோம் என்கிற எதிர்ப்பார்ப்புடன் செயலாற்றுகிறோம்.
நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு 20 மில்லியன் டாலர் மற்றும் 50 மில்லியன் டாலர் வரை( இந்திய மதிப்பில் ரூ.415 கோடி வரை அதிகரிக்க உள்ளோம்.
மொழிபெயர்ப்பாளர்களின் எதிர்காலம், மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு, மனித மொழிபெயர்ப்பாளர்களுக்கான தேவைகள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. பெரிய அளவிலான மொழிபெயர்ப்பின் பணிகள், சிக்கலான பணிகளை கையாளும் திறன், ஏஐ தொழில்நுட்பத்தை புதிதாக கற்றுக்கொள்ளுதல் போன்றவற்றால் தொடர்ந்து அவர்களால் கணிசமாக முன்னேற முடியும்’’ என்கிறார்.