சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியில்லை, சீமான் சட்டவல்லுநர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் என அதிமுக அமைப்புச்செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொது செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,2026 தேர்தலை எதிக்கொள்ள மேற்கொள்ள வேண்டியகளப்பணிகள் குறித்த் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வு. நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள். ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கு, நீட் விவகாரத்தில் திமுக மக்களை ஏமாற்றியது போன்ற செயல்களால் திமுகவினர் மீது மக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது இதன் தீவிரத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
”வலிமையான, வளமான அமெரிக்காவை உருவாக்குவேன்” – டொனால்ட் ட்ரம்ப்
கூட்டணி முடிவு செய்வதற்கான உரிய தருணம் இது இல்லை. ஆகையால் இது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்றார். தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், 2026ல் திமுக ஒழிந்து விடும். விஜய் கட்சி துவங்கியது குறித்து நாங்கள் ஆலோசிப்பதற்கான அவசியம் இல்லை என்றாா். தமிழ் தேசியம் தமிழ் மக்களின் அடையாளம் திராவிடம் எங்களின் ஐடியாலஜி. திராவிடம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல். தமிழையும் திராவிடத்தையும் பிரிக்க முடியாது. நாம் தமிழர் கட்சி சீமான் சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்.
ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் மேல் முறையீடு செல்லும் முன் விடுதலை பெற்றார். அதன் தீர்ப்பு வரும் முன் மறைந்து விட்டார். எனவே அவர் குற்றவாளியில்லை. சீமான் சட்டம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் என விளக்கமளித்தார். மேலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்துவது, பொதுக்குழு கூட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.