Homeசெய்திகள்5 வயது மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த தந்தை:தென்மலை பகுதியில் அதிர்ச்சி:

5 வயது மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த தந்தை:தென்மலை பகுதியில் அதிர்ச்சி:

-

சிவகிரி அருகே 5 வயது மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த தந்தை கைது.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா என்பவரது மகன் முனியாண்டி. பெயிண்டிங் வேலை செய்து வரும் முனியாண்டி மனைவி கார்த்திகை செல்வி தம்பதியினருக்கு முதலாவதாக தவமுனீஸ்வரன் (12) 6ம் வகுப்பு படிக்கும் மகனும், மற்றும் ஆறு வயதான 1ஆம் வகுப்பு படிக்கும்  மகிழன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மகிழன் தெரு அருகில் உள்ள செல்வ விநாயகர் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பி நின்ற மகிழனை அப்பா முனியாண்டி பள்ளிக்கு அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.  பள்ளியில் மகிழனின் புத்தகப் பை உள்ளது ,ஆனால் மகிழனை காணவில்லை என மகிழனின் அம்மாவிடம் கேட்டுள்ளனர். அதிர்ச்சி அடைந்த  அம்மா கார்த்திகை செல்வி உட்பட அனைவரும் தேட ஆரம்பித்துள்ளனர். பின்பு சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிவகிரி அருகே 5 வயது மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த தந்தை கைது.
தந்தை முனியாண்டி

புகாரின் அடிப்படையில் உடனடியாக முனியாண்டியின் செல்போன் அலைவரிசையை வைத்து முனியாண்டி இருக்கும் இடத்தை காவல்துறைனர் கண்டுபிடித்தனர்.அதன்படி திருவேங்கடம் அருகில் சென்று கொண்டிருந்தபோது காவல்துறையினர் முனியாண்டியை பிடித்து  விசாரித்த போது,மகன் மகிழனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாக முனியாண்டி கூறியுள்ளார்..

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மகிழனை அழைத்துக் கொண்டு சென்ற கிணற்றை அடையாளம் காட்ட கூறியுள்ளனர். இதனையடுத்து புளியங்குடி அருகே உள்ள நவாச்சாலை பகுதிக்கு காவல்துறையினரை அழைத்துச் சென்ற முனியாண்டி மகனை தள்ளி கொலை செய்த கிணற்றை அடையாளம் காண்பித்துள்ளார்.   சிவகிரி காவல்துறையினர் மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்புமீட்பு படையினர் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த மகிழன் உடலை மீட்டனர் . அதனை நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

சிவகிரி அருகே 5 வயது மகனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த தந்தை
மகிழன் (வயது 6)

சம்பவம் குறித்து மேலும் முனியாண்டியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது தனது வீட்டிற்கு அருகே குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மகிழனை எனக்கு பிறந்தவர் இல்லை என கூறியதால் சந்தேகம் அடைந்ததாகவும்,  இதனால் மகிழன் மீது தனக்கு இருந்த கோபத்தின் காரணமாக அவனை அழைத்துக் கொண்டு கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தனது ஆறு வயது மகனை தந்தையே கிணற்றிற்கு அழைத்துச் சென்று கிணற்றில் தள்ளி விட்டு துடிக்க துடிக்ககொலை செய்த சம்பவம் தென்மலை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ