Homeசெய்திகள்165 பேரின் பாதுகாப்பு போதாது... 350 பாது காவலர்கள் கேட்கும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷ..!

165 பேரின் பாதுகாப்பு போதாது… 350 பாது காவலர்கள் கேட்கும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷ..!

-

- Advertisement -

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்பை மீட்டெடுக்கக் கோரிய அவரது மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அரசால் தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை 60 ஆகக், குறைத்ததற்கு எதிராக ராஜபக்சே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

80 வயதான ராஜபக்சேவை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றும் பணியில் அரசு ஈடுபட்டுள்ள நேரத்தில், அவரது இந்த சட்டப் போராட்டம் வந்துள்ளது.இந்த ஆண்டு ஜனவரியில் ராஜபக்சே நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரி அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். டிசம்பர் 2024-ல் அரசு தனது பாதுகாப்பை வெகுவாகக் குறைத்ததாகவும், இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்ததாகவும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ தனது மனுவில், முன்னதாக தனது பாதுகாப்பிற்காக 350க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால், இப்போது இந்த எண்ணிக்கை 60 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் மூப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் முக்கிய பங்கு வகித்ததால், தனது உயிருக்கு கடுமையான ஆபத்து இருப்பதாக ராஜபக்சே கூறினார். இந்த மோதலில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் இருந்து தனித் தமிழ் நாட்டைக் கோரி வந்தது.

மஹிந்த ராஜபக்ஷ தனது மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவை, பாதுகாப்பு அமைச்சகத்தை பிரதிவாதிகளாக இணைத்திருந்தார். அரசு செலவினங்களைக் குறைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வசதிகளைக் குறைப்பதாக அரசு கூறுகிறது.இருந்தபோதும், அரசின் இந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் சில சலுகைகளை அனுபவிப்பதாகவும், இதுபோன்று திடீரென அவர்களுக்கு பாதுகாப்பு, தங்குமிட வசதிகளை இழப்பது தவறு என்றும் அவர் கூறுகிறார்.

மஹிந்த ராஜபக்ஷ 2005 முதல் 2015 வரை இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், 2009 ஆம் ஆண்டு, இலங்கை இராணுவம் தமிழ்ப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கொன்றதன் மூலம் அங்கு போராட்டம் நிறுத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார். அதே நேரத்தில் அரசு அவரை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் முழு வழக்கையும் விசாரணைக்கு தகுதியானது என்று கருதவில்லை. அத்துடன் ராஜபக்ஷவின் மனுவை நிராகரித்தது.

MUST READ