சமீபத்திய விதிமுறைகள் வங்கிகள், கட்டண சேவை வழங்குநர்கள், PhonePe, GPay மற்றும் Paytm போன்ற மூன்றாம் தரப்பு யுபிஐ சேவை வழங்குநர்கள் எண் யுபிஐ ஐடிகள் தொடர்பான குறிப்பிட்ட நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன.
புதிய யுபிஐ வழிகாட்டுதல்கள் செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடிகள் செயலிழக்கப்படும். புதிய யுபிஐ வழிகாட்டுதல்கள் செயல்பாட்டில் இல்லாத மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடிகள் செயலிழக்கப்படும்.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்சிபிஐ) ஏப்ரல் 1, 2025 முதல் ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (யுபிஐ) எண் அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை செயல்படுத்துகிறது. இந்த ஒழுங்குமுறை மாற்றமானது பரிவர்த்தனை செயலாக்கத்தில் உள்ள தவறுகளைக் குறைக்க வங்கிகள், கட்டண சேவை வழங்குநர் பயன்பாடுகள் வாராவாரம் மொபைல் எண் பதிவுகளைப் புதுப்பிக்க வேண்டும் எனக் கூறுகிறது.
சமீபத்திய விதிமுறைகள் வங்கிகள், கட்டண சேவை வழங்குநர்கள், PhonePe, GPay மற்றும் Paytm போன்ற மூன்றாம் தரப்பு யுபிஐ சேவை வழங்குநர்கள் மொபைல் எண் யுபிஐ ஐடிகள் தொடர்பான குறிப்பிட்ட நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன.
யுபிஐ மொபைல் எண் பதிவு, விவரங்களை சரிபார்க்க போர்ட்டிங்கிற்கு பயனர்களின் அனுமதியை என்சிபிஐ கட்டாயப்படுத்துகிறது. இந்த வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சம், யுபிஐ பயனர்கள் தங்கள் யுபிஐ மொபைல் எண்களின் பதிவை வெளிப்படையாகத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம், இது ஒப்புதல் வழிமுறைகளின் தெளிவு, வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்துகிறது. குறிப்பாக, பரிவர்த்தனை செயல்பாட்டின்போது அதற்கு முன் ஒப்புதல் பெறவேண்டும்.
வங்கிகள், செயலிகள் மற்றும் மூன்றாம் தரப்பு வழங்குநர்களான ஜிபே, போம்பே போன்ற ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ)பயன்படுத்தும் அனைவரும் மார்ச் 31, 2025 க்குள் புதிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த மேம்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், மோசடி நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளின் போது பயனர் தொடர்புகளின் தரத்தை உயர்த்துவதே இதன் நோக்கம்.
பரந்த நிதி தொழில்நுட்பத் துறைக்குள், ஆன் லைன் பணப்பரிவர்த்தனையில் மகத்தான வளர்ச்சி அடைந்துள்ள நாடான இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புதல், பெறுதலில் யுபிஐ முக்கிய பங்கு வகிக்கிறது. Google Pay மற்றும் Paytm போன்ற யுபிஐ துறையில் போட்டியாளர்கள், புதிய உத்தரவுகளுக்கு இணங்க தங்கள் செயல்பாட்டு நெறிமுறைகளை சரிசெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிறுவனங்கள் இந்தியா முழுவதும் யுபிஐ பரிவர்த்தனைகளை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.