Homeசெய்திகள்இசை மூலம் மனிதருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது- ஏர்.ஆர்.ரகுமான்

இசை மூலம் மனிதருக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது- ஏர்.ஆர்.ரகுமான்

-

இசை மூலம் மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி நடந்து வருகிறது என்று இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருந்து ஒரு மைக்ரோசாஃப்டையோ ஒரு ஆப்பிள் நிறுவனத்தையோ ஏன் உருவாக்க முடியாது என்றும் இந்திய இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதால் அவர்களின் தலைமைத்துவத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் மெய் நிகர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் இந்த வருடத்திற்கான விருது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு வழங்கப்பட்டது.2022 ஆம் ஆண்டு லீ மஸ்க் திரைப்படம் வெளிவந்தது.சென்னை ஐஐடி பேராசிரியர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் ஏ.ஆர் ரகுமானுக்கு இந்த வருடத்திற்கான சென்னை ஐஐடியின் அனுபவமிக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையத்தின் விருதை வழங்கினர். அதன்பின்னர் 5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஆறு வருடமாக பலவிதமான தொழில்நுட்ப சிக்கலுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட லீ மஸ்க் மெய் நிகர் தொழில்நுட்ப திரைப்படம் குறித்து ரகுமான் உரையாடினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஆர் ரகுமான்.

உலகத்திற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்திற்காக நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.மெய் நிகர் தொழில் நுட்பத்தால் 37 நிமிட படம் பார்த்தவர்கள் 10 நிமிடம் படமா என கேட்டனர்.உலகத் தரமான அனுபவம் இந்தியாவிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என்ற ஆதங்கத்தில் உருவாக்கப்பட்டதே லீ மஸ்க் திரைப்படம் இந்த படத்திற்கு ஹாலிவுட்டில் இரண்டு விருதுகளும் இன்று ஐஐடியில் ஒரு விருதும் கிடைத்திருக்கின்றது எல்லா புகழும் இறைவனுக்கே என்றார்.விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் லீ மஸ்க் திரைப்படம் உருவாக்க 6ஆண்டுகள் ஆனது இந்த திரைப்படத்தை இப்போது உருவாக்கி விட்டதால் இதே தொழில்நுட்பத்தில் திரைப்படங்களை இனி ஒரு மாத காலத்தில் உருவாக்க முடியும் என்றார்.இந்தியாவில் இருந்து ஒரு மைக்ரோசாஃப்டையோ ஒரு ஆப்பிள் நிறுவனத்தையோ ஏன் உருவாக்க முடியாது என்றும் இந்திய இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதால் அவர்களின் தலைமைத்துவத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் கூறினார்.

முன்னதாக மேடையில் பேசிய ஏ.ஆர்.ரகுமான்,

மெய்நிகர் தொழில்நுட்பம் புதிய தொழில்நுட்பம் என்பதால் அனைவரும் ரசித்தனர்.ஏன் அடுத்த மைக்ரோசாப்ட்டோ, ஆப்பிளோ இந்தியாவில் இருந்து வர கூடாது. நமது நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும். இந்தியாவில் VR மூலமாக கோவில்களை சுற்றி பார்க்கலாம். கல்யாண நிகழ்ச்சியை உணர்வு பூரவமாக ரசிக்கலாம். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் தலை வலிக்கும் என்றார்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். கற்பனைக்கு கட்டுப்பாடுகள் கிடையாது.

இசை மூலம் மனித சிகிச்சை அளிப்பது குறித்தான ஆராய்ச்சி நடந்து வருவதாகவும் இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

MUST READ