Homeசெய்திகள்சென்னையில் நள்ளிரவில் கனமழை- விமான சேவை பாதிப்பு

சென்னையில் நள்ளிரவில் கனமழை- விமான சேவை பாதிப்பு

-

- Advertisement -

சென்னையில் நள்ளிரவில் கனமழை- விமான சேவை பாதிப்பு

சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

flight

சென்னை வானிலை மையம் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 23-08-2023 முதல் 29-08-2023 வரை என 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் நள்ளிரவில் தொடங்கி அதிகாலை முதல் பட்டினம்பக்கம், மயிலாப்பூர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அண்ணா சாலை, வள்ளுவர்கோட்டம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், கேகே.நகர், ராயப்பேட்டை, அயனாவரம், மந்தைவெளி, எழும்பூர், சென்ட்ரல், குரோம்பேட்டை, தி.நகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் சென்னை நகர் மற்றும் நகரின் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அதேபோல் சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 8 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

MUST READ