Homeசெய்திகள்அறிவாளிகள் பிறந்த தமிழ்நாட்டில் கி.வீரமணி எப்படி பிறந்தார்..?: நாராயணன் திருப்பதி கேள்வி

அறிவாளிகள் பிறந்த தமிழ்நாட்டில் கி.வீரமணி எப்படி பிறந்தார்..?: நாராயணன் திருப்பதி கேள்வி

-

‘அசுரர்கள்’என்று ஆரியர்களால் பெயர் சூட்டப்பட்டு, அவதூறு சேற்றை அவர்கள்மீது பூசி, ‘தேவர்கள் வென்றார்கள், கொன்றார்கள்’என்று கதைகள் புனைவுமூலம் நம் திராவிட இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுக்கதைப் புராணம். ஆரியர்களின் யாகத்தை – பண்பாட்டை – படையெடுப்பைத் தடுத்தது குற்றமாம் அதற்கு வஞ்சகமாக கொலை நாளாம்! அறிவுள்ளோர், உணர்வுள்ளோர் ‘தீபஒளி’ என்று அழைக்கலாமா? இதைக் கொண்டாடலாமா? சிந்திக்கும் மனிதர்களாக மாறுங்கள்” என தீபாவளி பண்டிகை குறித்து திக தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்து இருந்தார்.'தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டிற்கு கி.வீரமணி பாராட்டு!'

இதற்கு பதிலளித்துள்ள பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதி, ‘‘அயோக்கியர்களின் அராஜகத்தை – பண்பாட்டு சிதைவினை அவதாரமெடுத்து அழித்தது/அழிப்பது குற்றமில்லை. தீய சக்திகளை அழித்த, அழிக்கும் நாளை கொண்டாடுவோர் நெஞ்சத்தில் வஞ்சகமில்லை. அறிவற்றோர், உணர்ச்சியற்றோர், நல்ல சிந்தனை இல்லாத தீய சக்திகள் தீபாவளியை கொண்டாடத் தேவையில்லை. தேவன் – தேவி இருவருக்கும் பிறந்த பிள்ளை எப்படி அசுரன், ராட்சசன், அரக்கனாக முடியும்? என்கிறார் கி.வீரமணி.

நல்லவர்கள், அறிவாளிகள் பிறந்த தமிழ்நாட்டில் கி.வீரமணி போன்றவர்கள் எப்படி பிறந்திருக்க முடியும்?’’ என பதிலடி கொடுத்துள்ளார் நாராயணன் திருப்பதி.

MUST READ